தோழர் முகிலனை முதலில் பார்த்த அவரின் நண்பர் பேட்டி !

சமூக செயற்பாட்டாளரான தோழர்.முகிலன் காணாமல் போகி பல மாதங்கள் ஆகிய நிலையில் அவர் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டன. எங்கே முகிலன் என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருந்தது.

Advertisement

இந்நிலையில், ஆந்திராவில் திருப்பதி ரயில்வே நிலையத்தில் தோழர்.முகிலனை ரயில்வே காவல்துறையின் கைது செய்து அழைத்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி வருகிறது. காவலர்கள் அழைத்து செல்லும் பொழுது தோழர்.முகிலன் கோஷங்களை எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக, தோழர்.முகிலனின் நண்பரான சண்முகம் என்பவரிடம் youturn ஆசிரியர் திரு.ஐயன் கார்த்திகேயன் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, நான் ஜோலார்பேட்டையில் இருந்து ராஜ்முந்திரிக்கு சென்று கொண்டு இருக்கும் பொழுது ரயில் 2 மணி நேரம் தாமதமாக 7 மணி அளவில் திருப்பதியில் ரயில் நிலையத்திற்கு சென்றது. அங்கு ரயில் நிற்கும் பொழுது, பயணிகள் இறங்கி சென்று கொன்டு இருந்தனர். பயணிகள் கூட்டம் இருக்கும் பொழுது முகிலன் கோஷமிட்டு கொண்டு காவல்துறை உடன் அழைத்து செல்லப்பட்டார். வெள்ளை சட்டை, தாடி உடன் சென்றார். இதன் பிறகு முகிலன் மனைவிக்கு போன் செய்து முகிலன் குறித்து தகவல் தெரிந்ததா என கேட்டேன். அதன் பிறகு, திருப்பதியில் அவரை பார்த்ததாக முகிலன் மனைவியிடம் தகவல் தெரிவித்தேன் ” என கூறி இருந்தார்.

முகிலன் காணாமல் போன பொழுது நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை அளித்த Hendri TIphagne இதனை உறுதி செய்து உள்ளார். அவர் தமிழ்நாடு டிஜிபி உடன் பேசி தகவலை அளித்து உள்ளார். முகிலன் தொடர்பான வழக்கு சிபிசிஐடி தரப்பில் இருப்பதால் அவர்கள் தான் முகிலனை மீட்க வேண்டும் என Hendri தெரிவித்து இருக்கிறார்.

இத்தனை மாதங்கள் எங்கிருக்கிறார் என தெரியாமல் இருந்து முகிலன் குறித்த செய்திகள் வெளியாகி இருந்தாலும், அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னவென்று கேள்விகள் எழுகின்றது.

Advertisement

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button