எங்கே முகிலன் ?

சமூக செயற்பாட்டாளரான தோழர் முகிலன் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், மணல் கொள்ளைக்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எனப் பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியவர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருக்கிணைப்பாளர் ஆவார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தில் பொதுமக்களுக்கு சம்பந்தம் இல்லை, போலீஸ் உயர் அதிகாரிகள் தான் வன்முறைக்கு காரணம் என முகிலன் கூறினார். அதற்கு ஆதாரமாக ” கொளுத்தியது யார் ? மறைக்கப்பட்ட உண்மைகள் ” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றைப் பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார் சூழலியல் போராளியான தோழர் முகிலன்.
அன்று இரவே அவருடன் நண்பர் பொன்னரசனும் எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். ஆனால், மதுரை செல்லும் ரயிலில் ஏறிய முகிலன் எங்கு சென்றார் எனத் தெரியாமல் இருந்தது. முகிலன் காணவில்லை என்ற செய்தி சமூக வலைதளங்களில் பெரிதாக பரவியது.
இதற்கு தமிழ்நாடு போலிஸ் காரணம் என்றக் குற்றச்சாட்டும் பதிவிடப்பட்டது. ஆனால், தோழர் முகிலன் காணாமல் போன சம்பவத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
முதலில் மதுரை ரயிலில் ஏறி செல்லும் பொழுது வழியில் முகிலன் கடத்தப்பட்டார் என்றே சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. ஆனால், எழும்பூர் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளில் முகிலன் மதுரை ரயிலில் ஏறவே இல்லை. ரயிலில் ஏறாமல் ரயில் நிலையத்தில் இருந்தே வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதனை அவரின் நண்பர் பொன்னரசன் பிபிசி தமிழில் தெரிவித்து உள்ளார்.
தோழர் முகிலன் காணவில்லை என தெரிந்ததில் இருந்து அவருக்கு ஆதரவாக எழுதி வந்த விஷ்வா விஸ்வநாத் என்ற பத்திரிகையாளரும் தன் முகநூல் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்து உள்ளார். மேலும், முகிலன் குறித்த பதிவுகளை நீக்குவதாகவும் கூறி இருந்தார்.
” முகிலன் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக எங்காவது சென்று இருக்கலாம் என கூறுகின்றனர்” .
Youturn தரப்பில் சில பத்திரிகையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இதேபோல் தகவல் வந்தது. முகிலன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக வெளி உலகத் தொடர்பு இன்றி இருக்கலாம்.
Youturn தரப்பில் இருந்து பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை உயர் அதிகாரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசியல் சூழலில் முகிலன் காணாமல் போனதில் போலீஸ் தரப்பில் எதாவது செய்து இருந்தால் எதிர்விளைவாக அமைந்து விடும். போலீஸ் ஏதும் செய்யவில்லை. இதுமாதிரியாக செய்தால் அவர்களுக்கு விளம்பரம் தேடி தருவது போன்று இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாதா எனக் கூறி உள்ளார்.
முகிலன் காணாமல் போனது குறித்து ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 22-ம் தேதிக்குள் காவல்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதில், காவல்துறை தரப்பில் அளிக்கும் பதிலை காத்திருந்து பார்ப்போம்.
கிடைத்த ஆதாரங்கள், தகவல்கள் அடிப்படையில் தோழர் முகிலன் விசயத்தில் அச்சத்தை உருவாக்காமல் இருத்தல் நல்லது.
செய்தியில் வெளியானது : சமூக செயற்பாட்டாளர் முகிலன் ரயிலில் ஏறினாரா?
Update :
முகிலன் காணாமல் போன தருணத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த ஹென்றி திபக்னே தன் முகநூல் பக்கத்தில் நாம் கட்டுரையில் கூறிய தகவலையே கூறியுள்ளார்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கட்டுரையில் விவரித்து இருப்போம். எனினும், நீண்டநாட்கள் ஆகியும் முகிலன் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்பதால், அவருக்கு ஆபத்துக்கள் கூட ஏற்படலாம் என்ற திசையில் தமிழக போலீசார் முகிலன் விசயத்தில் தீவிரமாக முயற்சிக்க வேண்டுகோளாக விடுக்கப்படுகிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=10157093816527265&id=701527264
முகிலன் தனிப்பட்ட காரணங்களால் எங்காவது சென்று இருக்கலாம் என பலரும் பேசி வந்த நிலையில் காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் அவர் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில், அவருடன் இணைந்து பல போராட்டங்களில் உடன் இருந்த காவிரி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இசை என்கிற ராஜேஸ்வரி என்பவர் தன் முகநூல் பக்கத்தில் சமீபத்தில் ஓர் தகவலை பதிவிட்டார்.
ஸ்டெர்லைட், மணல் கொள்ளை என பல சமூக போராட்டங்களில் முன்னின்று போராடிய முகிலன் எங்கு சென்றார் என்ற சரியான தகவல் நீண்ட நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. முகிலன் விசயத்தில் காவல்த்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.
மார்ச் 21 : முகிலன் விவகாரத்தில் முகநூலில் ஓர் பதிவை வெளியிட்ட ஐது இசை மீண்டும் நேற்று மற்றொரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
முழுமையாக படிக்க : https://m.facebook.com/story.php?story_fbid=865887793742649&id=100009643088091