கல்வித் திட்டத்திற்கு பயன்படுத்தாத 1,600 கோடியை தமிழக அரசு திருப்பி அளித்துள்ளது.

த்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என தமிழக அரசு கூறி வரும் வேளையில், 2018-19-ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாத 1,600 கோடியை தமிழக கல்வித்துறை ஆனது மத்திய அரசிடம் திரும்பி வழங்கி உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 2,500 கோடிக்கும் அதிகமான நிதியை அனைவருக்கும் கல்வி(சர்வ சிக்ச அபியான்) திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்நிலையில், மாநில நிதி தணிக்கை அறிக்கை 2019 படி, பள்ளிக் கல்வித்துறை அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாத காரணத்தினால் 2018-2019 கல்வியாண்டில் ரூ.1,627 கோடியை திரும்பி அளித்துள்ளது.

Advertisement

இதில், எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படாத ரூ.894 கோடியையும், மேல்நிலை கல்வி மேம்பாடு குறித்த திட்டத்தை செயல்படுத்த அளிக்கப்பட்ட ரூ.437 கோடியையும், கூடுதல் சிறப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.296 கோடியையும் கல்வித்துறையானது பயன்படுத்தவில்லை.

எனினும், இந்த திட்டத்தின் கீழ், கட்டமைப்பு வேலைகளான பள்ளி லேப் வசதி, நூலக வசதி அதிகரித்தல், மாணவர்களுக்கு சரியான கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படாதது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மத்திய திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளனர்.

” நிதியானது திருப்பி அளிக்கப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. கழிவறை வசதி உள்பட சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பல பள்ளிகள் மாநிலத்தில் உள்ளன. இது அதிகாரிகள் கவனம் கொள்ளாத திட்டங்களில் ஒன்றாகும் ” என ஆசிரியர்கள் அமைப்பு தலைவர் பி.கே இளமாறன் தெரிவித்து இருக்கிறார்.

திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படுவதில்லை என கூறும் ஆட்சியாளர்கள், கல்வித் திட்டங்களை செயல்படுத்த அளிக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் திரும்பி அளித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Proof : 

1.6K cr goes back to Centre as slack TN fails to use education funds

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close