This article is from Mar 23, 2022

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் முஸ்லீம் பிரிவில் மட்டும் மதம் மாறியவரா என்றக் கேள்வியால் எழும் கண்டனங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தின் விண்ணப்ப படிவத்தில் மதம் குறித்த இடத்தில் முஸ்லீம்களுக்கு மதம் மாறியவரா எனத் துணைக் கேள்வி இடம்பெற்றது சமூகவலைத்தளங்களில் கண்டனத்துடன் வைரலாகி வருகிறது.

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் புதிய பயனாளர் கணக்கை உருவாக்க நிரப்பப்படும் விண்ணப்ப படிவத்தில் மதம் எனும் பிரிவில் முஸ்லீம் எனத் தேர்ந்தெடுக்கும் போது, ” பிறப்பால் முஸ்லீமா அல்லது மதம் மாறியவரா? (Whether muslim by birth or converted ?) என்ற துணைக் கேள்வி கேட்கப்படுகிறது.

மதம் எனும் பிரிவில் இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் உள்ளிட்ட மற்ற மதத்தினர் எதற்கும் இப்படி ஒரு துணைக் கேள்வி கேட்கப்படவில்லை.

முஸ்லீம்களுக்கு மட்டும் மதம் மாறியவரா என இடம்பெற்ற துணைக் கேள்வி முன்பிருந்தே இருந்ததா அல்லது சமீபத்தில் இணைக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. பி.சி பிரிவில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு இருக்கிறது.

இதுகுறித்து விளக்கம் கேட்க டிஎன்பிஎஸ்சி தரப்பை தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுக்கவில்லை. விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதையும் இணைக்கிறோம்.

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் முஸ்லீம்களுக்கு மட்டும் மதம் மாறியவரா எனத் துணைக் கேள்வி இடம்பெற்றது கண்டனத்துக்குள்ளாகி வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader