தூத்துக்குடி நீதிமன்றத்தில் பெண் ஊழியரை நீதிபதி தாக்கியதாக போராட்டம்!

தூத்துக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவரை நீதிபதியே தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . இதுதொடர்பாக, செய்தி இணையதளத்தில் வெளியான புகைப்படங்கள் கூடிய செய்தியை ஃபாலோயர் தரப்பில் யூடர்ன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து , சம்பவம் குறித்து கேட்டு இருந்தார். இதையடுத்து , சம்பவம் குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

தூத்துக்குடியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக பணிபுரியும் சாரதி(38) என்ற பெண் ஊழியர் தமிழில் டைப் செய்த தாளை எடுத்துக் கொண்டு நிலவேஷ்வரன் என்ற நீதிபதியிடம் அளித்து உள்ளார். அந்த தாளில் தமிழில் டைப் செய்ததில் பிழைகள் இருந்ததாகவும் , அதை சரி செய்து அளித்த தாளில் மீண்டும் பிழைகள் இருந்த காரணத்தினால் வாக்குவாதம் உருவாகி உள்ளது.

இதனால் கோபம் அடைந்த நீதிபதி பேப்பர் பேடை தூக்கி வீசியதில் சாரதியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு சாரதி அழைத்து செல்லப்பட்டு தலையில் 5 தையல் போடப்பட்டுள்ளது என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது . அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உடன் சம்பவம் குறித்து நவம்பர் 5-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது .

இந்த சம்பவத்தையடுத்து, தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் , ஆனால் வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. பணியில் திருப்பதி இல்லை, பிழைகள் இருந்தால் மெமோ கொடுக்கலாம் அல்லது சஸ்பெண்டு செய்யலாம், அதைவிடுத்து நீதித்துறையில் இருப்பபவரே தாக்குதலில் ஈடுபடுவது சரியான என தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நீதிமன்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அதேபோல் , நவம்பர் 5-ம் தேதி கோவை மாவட்ட நீதிமன்ற ஊழியர் சங்கம் தரப்பில் நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது. அணைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காயம்பட்ட சாரதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் , நீதிமன்றத்தில் நிகழ்ந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தி உள்ளனர்.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் பெண் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதியவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. மேலும், பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக நீதிபதி நிலவேஷ்வரன் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. அது தொடர்பான விளக்கங்கள் எங்கும் பதிவாகவில்லை. நீதிபதி தரப்பில் விளக்கம் அளித்தால் அதையும் பதிவிடுகிறோம்.

Links : 

Protest against judge who allegedly attacked woman employee at Court complex

news/judiciary/attack-against-typist-in-thoothukudi

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button