Articles

பொது இடத்தில் மலம் கழித்ததாக இரு குழந்தைகள் அடித்து கொலை !

பொது இடத்தில் மலம் கழித்ததால் பட்டியலின குழந்தைகள் இருவரை அடித்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தி குறித்தும், சமூக வலைதளத்தில் வைரலாகும் இறந்த குழந்தைகளின் புகைப்படங்கள் குறித்தும் ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் கேட்டுக் கொண்டனர்.

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி கிராமத்தில் செப்டம்பர் 25-ம் தேதி காலையில் பஞ்சாயத்து அலுவகம் எதிரான உள்ள சாலையில் மலம் கழித்ததாகக் கூறி 10 வயது உடைய அவினாஷ் என்ற சிறுவனும், 12 வயதுடைய ரோஷினி என்ற சிறுமியும் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையின் தகவலின் படி, ஹகீம் என்பவர் சாலையை அசுத்தம் செய்யக் கூடாது என பொது இடத்தில் மலம் கழிக்க சென்ற குழந்தைகளை தடுத்து உள்ளதாகவும், பிறகு ராமேஷ்வர் என்பவருடன் சேர்ந்து தாக்கியதாகவும்கூறுகின்றன. சம்பவம் தொடர்பாக ஹமீம் மற்றும் ராமேஷ்வர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் உறவினர்கள் எனத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அப்பகுதியில் பதற்றம் உருவாகியது. இறந்த சிறுவன் அவினாஷ் உடைய தந்தை மனோஜ் வால்மீகி கூறுகையல் , அதிகாலை 6 மணிக்கு இருவரும் மலம் கழிக்க சென்றனர். அவர்களை ஹகீம் மற்றும் ராமேஷ்வர் ஆகிய இருவரும் தடியால் தாக்கியுள்ளனர். இருவரும் இறக்கும்வரை தாக்கியுள்ளனர். நான் அங்கு செல்லும் பொழுது அங்கிருந்து அவர்கள் தப்பித்து சென்றதாக ” கூறியுள்ளார்.

தங்களின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. கிராமத்தில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என்பதால் வெளியே சென்று மலம் கழிக்கும் நிலை இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், வீடுகளில் கழிப்பறைகள் கட்ட பஞ்சாயத்திற்கு நிதியுதவி வந்தும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தரவில்லை என மனோஜ் வால்மீகி கூறியுள்ளதாக பிபிசி-யில் வெளியாகி இருக்கிறது.

போலீசார் கூறுகையில், முன்விரோதம் இருப்பதாக தெரியவில்லை மற்றும் சாதிய ஒடுக்குமுறை குறித்து புகார் இல்லை எனக் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட ஹமீம் மற்றும் ராமேஷ்வர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களின் மீது ஐபிசி 302 மற்றும் எஸ்சி, எச்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குவாலியர் ரேஞ்ச் உடைய ஐஜி ராஜூபாபு சிங் தி இந்திய எக்ஸ்பிரஸ் செய்திக்கு கூறுகையில், ஹகீம் மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் குழந்தைகள் அவர்களின் தாத்தாவின் வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கொலை செய்து உள்ளதாக கூறியுள்ளார். இதற்கும் பொது வெளியில் மலம் கழித்தற்கும் சம்பந்தமில்லை என்பது போன்று தெரிவித்து இருந்தார்.

குற்றவாளி ஹமீம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதனால் அப்படி செய்து உள்ளார் எனக் கூறினர். ஆனால், ஹமீம் நலமாகத் தான் இருக்கிறார். நாங்கள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். ஆனால், சாதிய ஒடுக்குமுறை குறித்து புகார்கள் இல்லை. ஏனெனில், யாதவ் மற்றும் ஜாதவ் ஆகிய இரு சமூகமும் அக்கிராமத்தில் சமமானவை ” என மாறுபட்ட தகவலை மூத்த காவல் அதிகாரி ராஜேஷ் சிங் கூறியதாக NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அப்பகுதியில் பட்டியலின மக்களுக்காக பணியாற்றி வரும் சுதிர் கோடே கூறுகையில், இந்த வழக்கில் அதிகாரம் கொண்ட சமூகம் ஈடுபட்டுள்ளதால் காவல்துறை துணை போவதாக கூறியுள்ளார். மேலும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் இறந்தவர்கள் இருந்ததாக கூறியுள்ளார்.

பொது இடத்தில் மலம் கழித்ததாக அடித்து கொல்லப்பட்ட அவினாஷ் மற்றும் ரோஷினி ஆகிய இருவரின் உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் உடல்கள் வைத்து உறவினர்கள் அழும் புகைப்படத்தை NDTV செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.

இந்த சம்பவம் அரசியல் மோதல்களையும் உருவாக்கியுள்ளது. கழிவறை வசதியை ஏற்படுத்தி தரவில்லை என காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரு கட்சிகளையும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், குழந்தைகள் இறப்பிற்கு அம்மாநில முதல்வர் கமல்நாத் ட்விட்டரில் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Links :

MP: Dalit children killed over open defecation, police say killer ‘mentally unstable’

Two Dalit children ‘beaten to death’ over open defecation in Madhya Pradesh’s Shivpuri district

Open Defecation Linked To Dalit Children’s Killing, Week Before Milestone

Madhya pradesh : ” Beating up ” of dalit children defecting in the open 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button