உக்ரைன் மக்களுக்கு இஸ்கான் அமைப்பு உதவுகிறதா ? இந்து தமிழ் பொய் செய்தி வெளியிட்டதா ?

தி இந்து நாளிதழ், ” உக்ரைனில் மக்களுக்கு உதவும் இஸ்கான் கிருஷ்ணர் கோவில் ” எனும் தலைப்பில் வெளியிட்ட செய்தியில், ” உக்ரைனில் போர் தாக்குதலால் சிக்கிய மக்களுக்கு உதவுவதற்காக தனது கோயில் கதவுகளை இஸ்கான் கிருஷ்ணர் கோயில் நிர்வாகம் திறந்துவிட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து, கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயில் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் கூறிய போது ” உக்ரைனில் உள்ள பல்வேறு இஸ்கான் கோயில் வளாகங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள் எந்த நேரத்திலும் கோயில் வளாகத்துக்கு சென்று உதவியை பெறலாம் ” என உணவு வழங்கப்படும் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது.

Twitter link

ஆனால், இஸ்கான் கோயிலில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள் என செய்தியில் வெளியாகி இருந்த புகைப்படம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தது அல்ல. இப்புகைப்படம் இஸ்கானின் alachuatemple இணையதளத்தில் உணவு விநியோகம் பிரிவில் முதன்மையாகவே இடம்பெற்று இருக்கிறது. 2019-ம் ஆண்டில் இஸ்கான் குறித்து iskcondesiretree எனும் இணையதளத்தில் வெளியான கட்டுரையிலும் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

DNA போன்ற சில ஆங்கில செய்தியில் இப்புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்ததால் தி இந்து தமிழும் அந்த புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கலாம். உக்ரைன் நாட்டில் இஸ்கான் அமைப்பு சார்பில் உணவு வழங்குவதாக பழைய புகைப்படத்தை வெளியிட்டதால், சில மணி நேரத்திலேயே அந்த செய்தியை தி இந்து தமிழ் இணையதளத்தில் நீக்கி விட்டது.

இருப்பினும், செய்தியை நீக்குவதற்கு முன்பாக இணையதளத்தில் எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்சார்ட் மற்றும் செய்தித்தாளில் வெளியான பக்கம் உள்ளிட்டவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

உக்ரைன் இஸ்கான் :

பிப்ரவரி 27-ம் தேதி கொல்கத்தா இஸ்கான் கோயில் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியின் போது, ” ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தலைநகர் கீவ் இஸ்கான் கோவிலின் கதவுகளைத் திறக்கிறது ” எனக் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

மேலும், உக்ரைன் நாட்டில் இருந்து தப்பித்து வரும் மக்களுக்கு அதன் அண்டை நாடான ஹங்கேரியில் உள்ள இஸ்கான் அமைப்பு உணவுகளை வழங்கி வருகிறது. அதுகுறித்த புகைப்படங்கள் இஸ்கான் அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

உக்ரைன் விவகாரத்தில் இஸ்கான் அமைப்பு மக்களுக்கு உதவுவதாக வெளியிட்ட செய்தியில் பழைய புகைப்படத்தை தி இந்து தமிழ் பயன்படுத்தியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Links: 

Russia-Ukraine crisis: Kyiv ISKCON opens temple door for stranded people

https://www.alachuatemple.com/food

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button