மாணவரை மீட்டதாகப் பதிவிட்ட தமிழக பாஜகவினர்.. யாரும் வரவில்லை எனப் பதிவிட்ட மாணவர் !

உக்ரைனில் நாட்டில் நிலவும் போர் சூழலால் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். எனினும், அங்கிருந்து தங்களை மீட்குமாறு வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Archive link 

இந்நிலையில், முகநூலில் தொடர்பு கொண்ட மாணவரை விரைவாக செயல்பட்டு பாஜக மீட்டதாக தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் சில ஸ்க்ரீன்சார்ட்கள் உடன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

தமிழியன் என்பவர், ” நாங்கள் ரோமானிய நாட்டில் தலைநகரில் உள்ளோம் அண்ணா 3 நாட்கள் மேலாக இருக்கோம். எங்களுக்கு விமானம் ஒதுக்க மடிகிரர்கள் ” என பாலசுப்ரமணியம் என்பவருக்கு செய்த கமென்ட், அடுத்ததாக அண்ணாமலை மற்றும் வானதி ஸ்ரீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு மற்றும் எங்களை விமானம் நிலையம் அழைத்து செல்வதாக எனக்கு அழைப்பு வந்தது, உதவி செய்த அனைவருக்கும் நன்றி ” எனக் கூறும் பதிவுகள் இடம்பெற்று இருந்தன.

ஆனால், மீட்கப்பட்டு விட்டதாக தமிழக பாஜக நிர்மல் குமார் உடைய பதிவை மறுத்த மாணவர், நாங்கள் இன்னும் ரோமானியா நாட்டில் தான் இருக்கிறோம் , ஏன் அரசியல் செய்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டு பதிவிட்டு இருக்கிறார் .

Facebook link 

அவருடைய பதிவில, ” நாங்கள் இன்னும் ரோமானிய நாட்டில் தான் உள்ளோம். ஏன் இந்த மாதிரி பதிவு செய்து அரசியல் செய்றீங்க பேருந்தும் வரலை விமானம் வரவில்லை உதவி செய்த மாதிரி காட்டி கொண்டு எப்புடி நீங்க பதிவு செய்றீங்க. உதவி கேட்டது தப்ப போச்சு

1 பதிவு – நான் அண்ணாமலை மற்றும் வானதி அவர்களுக்கு நன்றி கூறி ஒரு பதிவு செய்து இருந்தேன் அதற்கு காரணம் நான் உதவி கேட்டு பதிவு செய்த உடன் என்ன ஏது என்று தகவலை உடனே கேட்டு அறிந்து உதவி செய்கிறோம் என்று கூறினார்கள்..!
2 பதிவு – 5 மணிக்கு பேருந்து வருவதாக அழைப்பு வந்தது, ஆனால் அதே சமயம் விமானம் ரத்து ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள்!
நான் செய்த பதிவை யாரோ ஒருவர் அதை பகிர்ந்து நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டோம் என்றும் டிவிட்டரில் பதிவு செய்து இருக்கிறார்கள் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழியன் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். உக்ரைனில் இருந்து மாணவர்களை பிரதமர் மோடி மீட்பதாக வைரலான கார்டூனை கூட முகநூலில் பதிவிட்டு இருக்கிறார். ஆனால், அவரை மீட்டதாக தவறான தகவலை பாஜகவினர் பரப்பி வருவதை அறிந்து அதற்கு எதிராக மறுப்பு தெரிவித்து வருகிறார்.
Please complete the required fields.
Back to top button