உ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் !

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது உத்தரப் பிரதேச பாஜக.

Advertisement

குல்தீப் மீதான வழக்கும் பின்னணியும் :

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த பாஜகவை சேர்ந்த குல்தீப் செங்கார், கடந்த 2017ம் ஆண்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த பெண்ணிற்கான நீதி அவ்வளவு எளிதாகக் கிட்டவில்லை.

குல்தீப்பிற்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யவே ஒரு வருடம் ஆகி விட, அந்த பெண்ணின் குடும்பம் நீதிமன்ற விசாரணைக்காக உன்னாவ் செல்லும் வழியில், அவரது தந்தை குலதீப்பின் சகோதரர் அதுல் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாக பட்டப்பகலில் தாக்கப்படுகிறார். புகாரின் பெயரில் உத்தரப் பிரதேச போலீசார் ஐந்து நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கின்றனர். செல்வாக்கின் காரணமாக முக்கிய குற்றவாளியான அதுல் மீது வழக்கு பதியப்படவில்லை.

ஒரு வருடம் கழித்து 2018ம் ஆண்டு அந்த பெண்ணின் தந்தை சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். இதனை கண்டித்து , தனக்கு நீதி வேண்டி அந்த பெண் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீடு முன்பு தீக்குளிக்க முற்பட்டார். இதனிடையில், அந்த பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் சிறையிலேயே இறந்துவிட்டார்.

ஒருவழியாக உபி அரசு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் குல்தீப் மீது கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் மற்றும் அவரது கூட்டாளி சஷி சிங் மீது சிபிஐ குற்றம் சாட்டியது.

2017 அன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம், போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் ஒரு போலியான வழக்கில் அந்த பெண்ணின் தந்தையை கைது செய்த குற்றம், மேலும், போலீஸ் காவலில் அவரை கொடூரமாக அடித்து கொலை செய்த குற்றம், முதல் சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் அந்த பெண்ணை மீண்டும் ஒரு முறை கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற குற்றம் என நான்கு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார் குல்தீப் சிங் செங்கார் .

Advertisement

மனைவிக்கு வாய்ப்பு :

2021 ஆம் ஆண்டிற்கான உள்ளாட்சி தேர்தல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதில் ஃபதேபூர் சாவுரசி திரிதயா எனும் பகுதியில் போட்டியிட முன்னாள் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் மனைவி சங்கீதா செங்காருக்கு வாய்ப்பளித்திருக்கிறது பாஜக அரசு.

இதுகுறித்து பாஜக எம்.பி சிவ் பிரதாப் சுக்லா ஏ.என்.ஐ க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “குல்தீப் செங்கரின் மனைவிக்கு விவாதத்திற்குப் பிறகே உ.பி பாஜக அரசு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது என்று நினைக்கிறேன். குல்தீப் செங்கரின் மனைவி ஜில்லா பஞ்சாயத்து உன்னாவோவின் தலைவராக இருந்தார். அவருக்கு அந்த தொகுதியில் வரவேற்பு இருந்தால், ஒரு குற்றவாளியின் மனைவியாக அவரை அணுக கூடாது.” என தெரிவித்துள்ளார்.

Links : 

unnao-rape-case-a-timeline

nothing-wrong-in-giving-ticket-to-sengars-wife-for-up-local-body-election-shiv-pratap-shukla

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button