This article is from Sep 30, 2018

பெண்களை இழிவுப்படுத்தும் ஆஃப்கள் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள்..!

ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆஃப்களில் தற்போது ஆபாச வீடியோ காட்சிகள் உள்ள படங்கள், வீடியோக்களே அதிகம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதில், அந்த குறிப்பிட்ட ஆஃப்களை பயன்படுத்துவதற்கு ஆபாச காட்சிகளை காண்பிக்கின்றனர்.

Vigo video- formerly hypstar  என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பெண்களின் படத்தையும், வீடியோவையும் காண்பித்து இதில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள், என் நண்பன் இந்த ஆஃப்பை அதிகம் பார்க்கின்றான் என்று கூறி பதிவிடுகின்றனர்.

இது போன்ற ஆஃப்கள் ஆபாச காட்சிகளை வெளியிட்டும், பெண்களை தவறாக சித்தரித்தும் விளம்பரம் தேடுகிறார்கள். இவை சமூகத்தில் மக்களை தவறான எண்ணத்திற்கு திசை திருப்புகின்றது. இவ்வாறான ஆஃப்கள் தனிநபர் சுதந்திரத்திற்கு ஆபத்தானது.

இவை மட்டுமின்றி பல ஆஃப்கள் தனிநபர் அந்தரங்களை திருடும் செயல்களை செய்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற ஆஃப்கள் ஆபத்தானவை.

  1. மக்களை கவர்வதற்கு பெண்களின் அந்தரங்க பதிவுகள் பயன்படுத்தி உள்ளனர் இந்த ஆஃப்பை ப்ரொமோட் செய்யும் இந்த ஃபேஸ்புக் பக்கம்.
  2. இது போன்ற ஆஃப்களால் தனிநபர் எவருக்கும் பாதுகாப்பு இல்லை. அனைவரது தகவல்களும் திருடப்பட வாய்ப்பு உள்ளது. இம்மாதிரியான ஆஃப்கள் மற்றும் பக்கங்களை வளர விடுவதால் மற்றவர்களையும் பெண்களை இழிவாக வீடியோ எடுத்து பதிவு செய்யத் தூண்டும் மனநிலைக்கு காரணமாகி விடும்.
  3. குறிப்பாக, இந்த ஆஃப்கள் விளம்பரத்தை ஸ்பொன்சர் செய்து ப்ரொமோட் செய்கின்றனர். இதை ஃபேஸ்புக் எவ்வாறு அனுமதிக்கின்றது.
  4. இறுதியாக, பெண்களின் நலன் கருதியும், தனிநபர் பாதுகாப்பு கருதியும் இதை வெளியிட்ட Vigo video- formerly hypstar  என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு அனைவரும் 1 star கொடுத்து அதை ஸ்க்ரீன்சொர்ட் எடுத்து நமது கம்மண்டில் பதிவு செய்யவும்.

பெண்களை தவறாக காண்பிக்கும், ஆபாச எண்ணத்தை உருவாக்க முயற்சிக்கும், தனிநபரின் தகவல்களை திருடும் ஆஃப்கள் மற்றும் அதற்கு துணை போகும் பக்கங்கள் நீக்கப்பட வேண்டும். இவ்வாறான குற்றங்களுக்கு இந்திய அரசிலமைப்பு சட்டம் 354c மற்றும் information technology act 66E, 67, 67A படி குற்றமாகும். இம்மாதிரியான குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படுகிறது.

Indian penal code section 354c  

section 66E in the information technology act 2000

section 67 in the information technology act 2000

section 67A in the information technology act 2000 

indian penal code section 354A, 354B,354C, 354D

Please complete the required fields.




Back to top button
loader