எனக்கு வாக்களிக்காத இந்துக்கள் துரோகிகள், அவர்களுக்கு டி.என்.ஏ சோதனை செய்வேன் என்ற பாஜக எம்எல்ஏ !

உத்தரப் பிரதேசத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வரும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், தனக்கு வாக்களிக்காத இந்துவின் உடலில் முஸ்லீம்களின் இரத்தம் இருப்பதாகவும், தன்னைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்கும் இந்துக்களின் டி.என்.ஏக்களை சோதிக்கப் போவதாக மிரட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Twitter link

பிப்ரவரி 19-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் துமரியகஞ்சில் பாஜக எம்எல்ஏ வேட்பாளர் ராகவேந்திரா பிரதாப் சிங் இந்தியில் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவை பத்திரிக்கையாளர் அலிஷன் ஜாப்ரின் மொழிப் பெயர்த்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

” எனக்கு வாக்களிக்காத எந்த இந்துவின் நரம்புகளிலும் மியான்(முஸ்லீம்களை இழிவுப்படுத்தும் சொல்) இரத்தம் பாய்கிறது. அவர்கள் துரோகிகள் மற்றும் ஜெய்சந்தின் முறைகேடான குழந்தைகள். இவ்வளவு அட்டூழியங்களுக்குப் பிறகும், ஒரு இந்து மறுபுறம் சென்றால் அவர்கள் தெருக்களில் முகத்தைக் காட்ட முடியாது. உங்களில் எத்தனை பேர் ஜெய்சந்தர்கள் ?

அவர்களின் பெயர்களை எனக்குக் கொடுங்கள், அவர்கள் இந்துக்களா அல்லது மியான்களா என்பதை பார்க்க அவர்களின் இரத்தத்தை நான் பரிசோதிப்பேன், அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனையை நான் செய்கிறேன் ” என கிராம மக்களுக்கு முன்பாக பேசி உள்ளார்.

Twitter link  

பாஜக எம்எல்ஏ ராகவேந்திரா பிரதாப் சிங் பேசிய வெறுப்பு பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சித்தார்த்நகர் காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

2022 பிப்ரவரி 11-ம் தேதி ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய ராகவேந்திரா பிரதாப், நான் எம்.எல்.ஏ ஆனதில் இருந்து அவர்கள்(முஸ்லீம்கள்) தலையில் துணி அணிவதை நிறுத்திவிட்டார்கள், நீங்கள் எனக்கு மீண்டும் வாக்களித்தால் அவர்கள் நெற்றியில் திலகம் வைக்க தொடங்குவார்கள் ” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இம்முறை வாக்களிக்காத இந்துக்கள் துரோகிகள், அவர்களுக்கு டி.என்.ஏ சோதனை செய்வேன் எனப் மிரட்டி பேசியது வைரலாகி வருகிறது.

Links :

will-conduct-dna-test-bjp-legislator-caught-giving-hate-speech-again

‘Hindu Who Doesn’t Vote For Me Has Miyan Blood in Veins’: BJP MLA Threatens Muslims With Violence

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button