உ.பியில் கழிவறையில் வைத்து கபடி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு.. எழும் கண்டனங்கள் !

த்தரப் பிரதேசத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் உள்ள கழிவறையின் தரையில் வைத்து உணவு வழங்கப்படும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் இந்திய அளவில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertisement

செப்டம்பர் 16ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் சகாரன்புர் பகுதியில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் மைதானத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு உள்ளிட்டவை மைதானத்திலேயே வழங்கப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவில், போட்டியில் கலந்து கொண்ட கபடி வீரர்களுக்கு சாதம், பூரி உள்ளிட்ட உணவானது அங்குள்ள கழிவறையின் தரையில் வைக்கப்பட்டு இருக்கிறது. தரையில் வைக்கப்பட்ட உணவை பெண்கள் வரிசையாக தட்டில் எடுத்து வைத்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, சமையல் பாத்திரங்கள் மற்றும் எண்ணேய் உடன் கடாய் உள்ளிட்டவையும் கழிவறையில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் இருப்பதைப் பார்க்கலாம்.

இதுகுறித்து சகாரன்புர் மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா கூறுகையில், ” மழை பெய்து வருவதால் இப்படி நிகழ்ந்தது. நீச்சல் குளம் பகுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நீச்சல் குளத்திற்கு அருகே உள்ள உடை மாற்றும் அறையில் உணவுகள் வைக்கப்பட்டுன. மைதானத்தில் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை காரணமாக உணவு வைக்க வேறு இடமில்லை ” எனக் கூறியதாக என்டிடிவி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

உபியில் பெண் கபடி விளையாட்டு வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், உபியில் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வைரலான வீடியோ சர்ச்சையையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியதை தொடர்ந்து அம்மாநில அரசு சகாரன்புர் மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Links :

Kabaddi players take food kept on toilet floor in UP’s Saharanpur, official suspended

watch food served to up kabaddi players in toilet space crunch says official

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button