This article is from Aug 07, 2020

சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் ஓபிசி-ஐ விட EWS-க்கு குறைவான கட் ஆப் !

கடந்த ஆண்டில் EWS எனும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்திற்கு இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய தேர்வுகளில் நிர்ணயிக்கப்பட்டு வரும் மதிப்பெண்கள் தொடர் கேள்விகளுக்கு உள்ளாகி வருகின்றது.

மேலும் படிக்க : அரசு பணி தேர்வுகளில் பொருளாதார இடஒதுக்கீடுக்கு மிகக்குறைவான கட் ஆஃப் !

கடந்த ஆண்டில் வெளியான எஸ்பிஐ கிளார்க் முதல்நிலைத்தேர்வின் முடிவுகளில், பொதுப்போட்டி, எஸ்சி, ஓபிசி எல்லாம் ஒரே கட் ஆஃப் என்கிற அளவுக்குக் கடுமையான போட்டி இருந்த தேர்வில் EWS-க்கு 28.5 மதிப்பெண் வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 2019 சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களில் EWS-க்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் ஓபிசி பிரிவினரை விட குறைவாக இருப்பது மீண்டும் கேள்விக்குள்ளாகி வருகிறது. முதல்நிலை, இரண்டாம்நிலை, இறுதி தேர்வு ஆகிய மூன்றிற்கும் ஓபிசி பிரிவினரை விட குறைவாகவும், இரண்டாம் நிலைத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை விட குறைவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

2019-ல் வெளியான பெல் நிறுவனத்தின் பணியில் கூட EWS-க்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் ஓபிசி பிரிவினரை விட குறைவாக இருந்தன. கடந்த ஆண்டில் இருந்து EWS-க்கு நிர்ணயிக்கப்படும் மதிப்பெண்களின் அளவு தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருவதை பார்க்க முடிகிறது.

Link : 

Civil service exams 2019 cut off marks 

Please complete the required fields.




Back to top button
loader