பணம் கொடுக்காததால் புகைப்படம் எடுக்க மறுத்த வைகோ| வைரலாகும் வீடியோ !

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ உடன் செல்ஃபி அல்லது புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் தொண்டர்கள் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க என வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக ம.தி.மு.க கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது.
கட்சிக்கு நிதி திரட்டும் வகையில் வைகோவிற்கு சால்வை அணிய வேண்டாம். அதற்கு உண்டான தொகையை கட்சிக்கு நிதியாக அளித்து விடுங்கள் எனக் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, வைகோ செல்லும் இடங்களில் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் தொண்டர்களிடம் சால்வைக்கு பதிலாக ரூ100-ஐ வாங்கி வருகிறார்.
இந்நிலையில் தான், வைகோ வேலூர் மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போழுது, ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்த வைகோவிற்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
வைகோ உடன் தொண்டர்கள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வமாய் இருந்தனர். அங்கு புகைப்படம் எடுத்துக் கொள்பவரிடம் 100 ரூபாயை கேட்டுக் பெற்றுக் கொண்டார். அதில், பணம் இல்லாமல் புகைப்படம் எடுக்க வந்த தொண்டர் ஒருவரிடம் பணம் எங்கே ? என்பது போன்று கை அசைவில் கேட்டு, புகைப்படம் எடுத்துக் கொள்ள மறுத்து உள்ளார்.
வைகோ தொண்டரிடம் பணம் கேட்டு புகைப்படம் எடுக்காமல் விரட்டிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்கள் முழுவதிலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Proof :
Pay and take selfie with Vaiko: MDMK’s new fundraising scheme