This article is from Feb 04, 2021

காதலர் தின பரிசென பரவும் மோசடி லிங்க்.. இதற்கு பின்னால் என்ன நடக்கிறது ?

” கேள்விக்கு பதில் கூறுங்கள் காதலர் தின சிறப்பு பரிசு பெறுங்கள், எனக்கு இப்பொது தான் IPhone 11 பரிசாக வந்தது.. நீங்களும் இந்த லிங்கை கிளிக் செய்து பரிசை வெல்லுங்கள் ” என போலியான Tata இணையதள லிங்க் ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

இன்று நேற்று அல்ல, வாட்ஸ்அப் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து இதுபோன்ற செய்தி பல வகையில், பல பெயர்களில் உலாவிக்கொண்டு இருக்கின்றன. இத்தகைய தளங்கள் எவ்வாறு, எதை வைத்து. எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றி பணம் செய்கிறார்கள் என்றும் இதுபோன்ற போலி தளங்களை எவ்வாறு கண்டறியலாம் என்பது குறித்தும் காணலாம்.

“ஒருத்தன ஏம்மத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்” – சதுரங்கவேட்டை காந்தி பாபு

போலி தளங்கள் சாமானியனை ஏமாற்றும் யுக்திகள்:

1. இத்தகைய தளங்கள் நாங்கள் Audi, Benz போன்ற வாகனங்களையும் IPhone, Redmi pro series, Samsung Note போன்ற ஸ்மார்ட்போன்களை இலவசமாக தருகிறோம் என்று அதிக விலை கொண்ட பொருட்களையே இங்கு தூண்டில் மீனாக பயன்படுத்துகின்றனர். அதுவும் குழுக்கள் முறையே பொதுவாக தேர்வு செய்கின்றனர். இதை நம்புவர்களும் வந்தால் லாபம், போனாலும் நஷ்டம் இல்லை என எண்ணியே இதை கிளிக் செய்கின்றனர்.

2. இவர்கள் தங்கள் தலத்தில் பலர் பரிசு பெற்றதாகவும், அதை தாங்களே கமெண்ட் செய்ததை போலவும் ஒரு போலியான comments conversation-யை உருவாக்கி வைப்பார்கள். புதிதாக அந்த தளத்தில் வரும் நபர் இவ்வளவு பெயர்கள் பரிசு வாங்கி உள்ளார்களே என்று நம்பி தொடர்ந்து விளையாட தொடங்குவர். ஆனால் உண்மையில் அது அனைத்தும் அவர்களாகேவ உருவாக்கிய போலி comments conversation.

3. இவை அனைத்தையும் தாண்டி அவர்களை நம்பி அந்த தளம் கூறும் விளையாட்டையோ, கேள்வியையே சரியாக முடித்துவிட்டால் நீங்கள் வென்றுவிட்டீர்கள். ஆனால் நீங்கள் மனிதன் தான் இயந்திரம் அல்ல (Human Verification) என்பதை நிரூபிக்க அவர்கள் தரும் லிங்கை 10-15 நபர்களுக்கு அனுப்ப சொல்லுவார்கள். நீங்கள் ஒவ்வொருக்காக அனுப்ப அனுப்ப எண்ணிக்கை குறையும். இங்கு ஒரு விஷத்தை கூற விரும்புகிறோம், நீங்கள் யார் யாருக்கு எத்தனை முறை அனுப்புகிறீர்கள் என்று எந்த script மூலமாகவும் அறிய முடியாது, ஆனால் அவர்கள் வெறும் button click மூலமாக உங்களை ஏமாற்றுவார்கள்.

இறுதியாக பலமுறை உங்களை ஏமாற்றிய பிறகு இறுதி முயற்சியாக ஒரு popup allow button-யை கொடுக்க சொல்லுவார்கள். அவ்வளவு தான் அதன் மூலம் தினமும் இதைப்போல பல பல செய்திகள் அனுப்பி விளம்பரம் மூலமாக அவர்களுக்கு பணம் செய்து கொள்வார்கள்.

போலி செய்திகளை கண்டறியும் எளிய முறை:

  1. இத்தகை இலவச பரிசு, குழுக்கள் பரிசு என்று வாட்ஸ்அப்யில் வரும் செய்திகளை பெருவாரியாக தவிர்ப்பதே நல்லது, மீறி நீங்கள் அதை பயன்படுத்த நினைத்தால் முதலில் கவனிக்கவேண்டியது URL, அது உண்மையான தளமாக இருந்தால் அதை URL பார்த்த உடனே உண்மையா போலியா என்பதை எளிதாக கண்டுகொள்ளலாம்

2. தளத்தின் security certificate

3. அந்த தளத்தின் பெயரை googleயின் உதவியுடன் தரம் மற்றும் மற்றவர்களின் (review) கருத்துக்களை கேட்டுக்கொள்வது.

இத்தகைய தளங்களை பெரும்பாலும் உங்களிடம் பொய் கூறி அவர்களின் விளம்பரங்களை காண்பித்தே வருவாய் ஈட்டுகிறார்கள். எனவே இத்தகைய தளங்களை நண்பர்கள் குழுவில் பகிராமல் இருப்பதே தளத்தின் பாதி பரவல் வேகத்தை தடுத்து விடும்.

Please complete the required fields.




Back to top button
loader