This article is from Sep 30, 2018

ஸ்டெர்லைட்க்கும் ப.சிதம்பரத்திற்கும் என்ன தொடர்பு ?

இந்தியா கனிம வளங்களுக்கு பஞ்சமின்றிய செழிப்பான தேசம். ஆனால், இன்றோ ! காடுகள், மலைகள், ஆறுகள் என நீண்ட காலமாக பசுமை மாறாமல் இருந்து வந்த இந்திய தேசத்தின் வளங்கள் அனைத்தும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில் என்கிற பெயரில் சுரண்டப்படுவது தொடர் கதையாகி விட்டது. அரசாங்கம் தொழில் வளர்ச்சியடைந்தால் நாடும் வளர்ச்சி பெறும் எனக் கூறி கனிம வளங்கள், நீர் ஆதாரங்கள் என அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் மண் வளம், கடல் வளம், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மக்கள் போராடி வரும் வேளையில் அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் மற்றும் அவற்றால் பயனடைந்தவர்கள் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோம்.

வேதாந்தா ரிசொர்சஸ் :

2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்த போது மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்தார். அந்நேரத்தில், இந்தியாவில் இருக்கும் கனிம வளங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில் 4 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பல லட்சம் டன் விலை உயர்ந்த இரும்பு தாதுக்கள் உள்ளன. மேலும், அதில் யுரேனியம், நிலக்கரி, டின், கிரனைட், மார்ஃபில், காப்பர், டைமண்ட், கோல்ட், சிலிக்கா உள்ளிட்ட 28 வகையான கனிம வளங்கள் புதையுண்டு உள்ளன.

எனவே, அப்பகுதிகளில் அணைகள், ஸ்டீல் மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல திட்டத்தை செயல்படுத்துவதால், அம்மாநிலங்களில் உள்ள தண்டகாரண்ய வனப்பகுதியில் வசித்து வந்த பழங்குடியினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கு எதிராக பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டமானது மிகப்பெரிய சுரங்கத் தொழில் மற்றும் ஸ்டீல் தொழில் நிறுவனங்களான மிட்டல்ஸ், ஜிண்டா, டாடா, போஸ்கோ, எஸ்ஸார், ரியோடன்டோ, பில்லிடன், வேதாந்தா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதையடுத்து, இந்திய அளவில் வேதாந்தா நிறுவனத்தின் கனிமம் சார்ந்த தொழில்கள் விரிவடைந்துள்ளன.

வேதாந்தா ரிசொர்சஸ் உலகில் உள்ள மிகப்பெரிய சுரங்கத் தொழில் நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. லண்டனை மையமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் ஆவார். வேதாந்தா நிறுவனத்திற்கு கீழ் இந்தியாவில், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றன.  இந்நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் மட்டுமின்றி மேட்டூர் அணை, ஏற்காடு, கொல்லிமலையில் அலுமினிய சுரங்கமும் உள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் :

இந்திய அளவில் பல இடங்களில் விரிவடைந்து இருக்கும் வேதாந்தா நிறுவனத்திற்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவியில் அமர்வதற்கு முன்பாக, பல பெரும் கார்ப்பரேட் குழுமங்களுக்குவழக்கறிஞராக மற்றும் சில நிறுவனங்களின் இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றி வந்துள்ளார். ஆம், 2004-ல் மத்திய நிதியமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முந்தைய நாள் வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாகம் சாராத இயக்குனராக(NED) பதவி வகித்து வந்துள்ளார்.

அவருக்கு அடிப்படை ஊதியமாக 23,000 பவுண்ட் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 14, 2003-ல் வேதாந்தா நிறுவனத்தில் நிர்வாகம் சாராத இயக்குனராக பதவி ஏற்றார் ப.சிதம்பரம். இவர் மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பாக 22 மே 2004 தேதியில் தாம் வகித்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

சேஷா கோவா நிறுவனம் :

இந்தியாவில் ரூ.4,070 கோடி அளவிற்கு இரும்பு தாது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்து வந்த சேஷா கோவா நிறுவனத்தின் 51% பங்குகளை 23, ஏப்ரல் 2007 அன்று வேதாந்தா நிறுவனம் தன் வசமாக்கியது. அதற்கு முன்பாக சில கவனிக்க வேண்டிய விஷயங்கள் நடைபெற்றன.

பிப்ரவரி 28, 2007-ம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் யூனியன் பட்ஜெட்டில் இரும்பு தாது ஏற்றுமதி குறித்த வரிகளை திணித்துள்ளார். “ திட்டத்தை வகுக்கும் ஆணையமானது( Anwarual Hoda committee) கனிமங்களின் கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நமது இயற்கை வளங்களின் பாதுக்காப்பிற்காக சில மாற்றங்களை செய்வதால் நம் வருவாயும் அதிகரிக்கும். ஏற்றுமதி செய்யப்படும் ஒரு டன் இரும்பு தாதுவிற்கு ஏற்றுமதி வரி ரூ.300  மற்றும் chrome தாதுவிற்கு டன் ஒன்றிற்கு ரூ.2000 ஆக இருந்ததைக் குறைக்க வேண்டும் என முன்மொழிவதாக கூறினார். இதற்கு 2011 ஆம் ஆண்டு மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏற்றுமதி வரி ரூ.300-ல் இருந்து ரூ.50 ஆக குறைந்த இரண்டு மாதங்களில் ஸ்டீல் தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகின. நிதி அமைச்சரின் செயலால் வேதாந்தா சேஷா கோவா நிறுவனம் பயன் அடைந்ததாகக் கூறியச் செய்திகளுக்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. ஒட்டுமொத்த இந்திய இரும்பு தாது ஏற்றுமதியில் 10% சேஷா கோவா செய்து வருகிறது. 2010-2011 இடைப்பட்ட காலத்தில் சேஷா கோவா நிறுவனம் ரூ.8,387 கோடி வருமானம் ஈட்டியது. அதில், நிகர லாபம் மட்டும் ரூ.4,884 கோடியாகும். 2007-2012-க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மட்டும் சேஷா கோவா நிறுவனத்தின் லாப மதிப்பு 159% உயர்ந்துள்ளது.

ப.சிதம்பரம் வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாகம் சாராத இயக்குனராக பணியாற்றினார். அதற்கு முன்பாக 2003 ஆம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வரி ஏய்ப்பு வழக்கில் வழக்கறிஞராக வாதாடினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, வழக்கறிஞராகவும், இயக்குனராகவும் வேதாந்தா நிறுவனத்தில் பணியாற்றிய திரு.ப.சிதம்பரத்தின் வரி குறைப்பு செயல்பாடு சேஷா கோவா நிறுவனத்தின் ஏற்றுமதிக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. தேசிய கட்சிகளுக்கு வேதாந்தா, சேஷா கோவா, ஸ்டெர்லைட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதியை அளித்தவை என்பதை முந்தைய கட்டுரையில் அறிந்து கொண்டோம்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை வரி ஏய்ப்பில் இருந்து பாதுகாக்கவும், இந்தியாவின் கனிமங்களை அயல் நாடுகளுக்கு விற்பனை செய்யும் நிறுவனத்திடம் இயக்குனராக பணியாற்றியவரே இந்தியாவின் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவரிடம் மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் குறித்த கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில், மத்தியில் ஆளும் கட்சியும், எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சியும் கார்ப்பரேட் பக்கமா ?

Vedanta Resources 

Mr.chidambaram’s War

Chidambaram’s 2007 flip-floplet anil agarwal’s vedanta take over sesa goa 

Please complete the required fields.




Back to top button
loader