விஜிபி-யின் “சிலை மனிதர்” கொரோனாவால் மரணம் என வதந்தி !

சென்னை விஜிபி தங்கக்கடற்கரை ரெசார்ட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ” சிலை மனிதனாக” பணியாற்றி வரும் 60 வயதான தாஸ் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் பரவத் தொடங்கின.
சில தமிழ் மற்றும் ஆங்கில செய்தி இணையதளங்கள் கூட விஜிபி-யின் சிலை மனிதர் இறந்து விட்டதாக செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் சமூக வலைதளங்களில் கூட சிலை மனிதர் இறந்து விட்டதாக எண்ணி அஞ்சலி செலுத்தத் தொடங்கினர். ஆனால், விஜிபி-யின் சிலை மனிதர் கொரோனா வைரசால் இறந்து விட்டதாகப் பரவும் தகவல் வதந்தியே.
” நான் விஜிபி-யில் சிலை மனிதனாக வேலை பார்க்கிறேன். தற்போது நான் இறந்து விட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். விஜிபி மறுபடியும் திறந்த பிறகு என்னை நீங்கள் காணலாம் ” என தாஸ் பேசிய வீடியோ விஜிபி-யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.