விஜய்சேதுபதி மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல் விடுக்கும் ட்விட்டர் பதிவு !

முத்தையா முரளிதரன் வாழ்வியல் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ” 800 ” திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முரளிதரன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, ” நன்றி.. வணக்கம்” எனக் கூறி அவரின் அறிக்கையை விஜய்சேதுபதி பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில், Rithik@ItsRithikRajh எனும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விஜய்சேதுபதி மகளை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என ட்வீட் வெளியாகி இருக்கிறது. தகாத வார்த்தைகள் மூலம் விஜய்சேதுபதியை திட்டி பகிரப்பட்ட ட்வீட் பதிவை தற்போது ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்து பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
Rithik @ItsRithikRajh ட்விட்டர் பக்கத்தை இயக்கியது ஈழத் தமிழர் ஆதரவாளரா அல்லது அரசியல் காரணமான உருவாக்கப்பட்ட போலியான ட்விட்டர் பக்கமா எனத் தெரியவில்லை. இந்த ட்விட்டர் பக்கம் இலங்கையருடையது எனச் சிலர் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், எதும் உறுதிப்படுத்த முடியவில்லை. ட்விட்டர் பக்கம் 2020 ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து இதுபோல் பல ஆபாச கருத்துக்களை பதிவிட்டத்திற்காக ட்விட்டர் தளம் இந்த ப்ரொபைலிற்கு “Restricted to view” எச்சரிக்கையை கொடுத்து உள்ளது. மேலும் தனிப்பட்ட முறையில் சிலர் இணைய வழியில் காவல்துறைக்கு புகாரும் கொடுத்து உள்ளதாக பதிவிட்டு உள்ளனர்.
Personally Filed complaint in Chennai cyber cell @yazhini_pm pic.twitter.com/seXj98C7Vw
— தி கரிகாலா ♚ (@TheKarikala) October 19, 2020
இதற்க்கு முன்னர் நடிகை குஷ்பு அவர்கள் காங்கிரஸ் பதவியில் இருந்து விலகி பாஜகவிற்கு சென்றதால் இதே போல் பல ஆபாச புரளிகளை பரப்பினர், மேலும் IPL விளையாட்டு போட்டியில் சரியாக விளையாடாத காரணத்தால் கிரிக்கெட் வீரர் தோனி அவர்களின் மகளுக்கும் பாலியல் ரீதியான தாக்குதல் செய்வோம் என்று சமூகவலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டு அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க : குஷ்பு பாஜகவில் இணைந்த பிறகு பரப்பப்படும் வதந்திகளின் தொகுப்பு !
மேலும் படிக்க : தோனியின் 5 வயது மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல்| எல்லைமீறும் சமூக வலைதளவாசிகள்!
சமூக வலைதளங்களில் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார அச்சுறுத்தல்கள் எழுந்து வருவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற வக்கீரமான செயலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சமூக வலைத்தளம் பெண்கள் குழந்தைகள் மீதான எவ்வித தாக்குதலுக்கும் சமூகம் தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டே இருந்தால் மட்டுமே அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டு இது ஒரு பண்பட்ட சமூசாகமாக மாறும்.
தொடர்ந்து எந்த ஒரு விஷயத்திற்க்கும் சம்பத்தைபட்ட நபரின் வீட்டு பெண்களையோ குழந்தைகளையோ ஆபாசமாக மிரட்டுவது ஒரு சமூகத்தின் மனநோய் என்றே பார்க்க வேண்டும். இவ்வாறான ஆபாசமான நடவடிக்கைகளுக்கு அதிரடியான நடவடிக்கையே சரியாக இருக்கும், இவ்வாறான paedophile மனநிலையில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவதுதான் இந்த சமுகத்திற்கு நன்மையாகும்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.