” We care for you ” பெண்கள் பாதுகாப்பிற்கு சண்டிகர் போலீஸ் சேவை !

மதிப்பீடு
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய சேவை ஒன்றை 2017 ஜூலையில் சண்டிகர் காவல்துறை தொடங்கினர்.
இது தொடர்பாக “ We care for you , Women pick & drop facility After 10.00 pm “ என சண்டிகர் நகரின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. இதற்கென அவசர உதவி எண்கள் 1091, 100 , 0172-2749194 அல்லது 0172-2749100-ஐ வழங்கி உள்ளனர்.
இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரையில் பெண்கள் எங்காவது தனிமையில் இருந்து பாதுகாப்பாக இல்லை என உணரும் பட்சத்தில் அளிக்கப்பட்ட PCR எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்களை அழைத்து செல்ல வாகனம் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் அப்பெண்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்லலாம்.
பாதுகாப்பிற்காக வரும் காரில் டிரைவர் உடன் இரு பெண் போலீஸ் இருப்பர். இதற்காக 2 PCR வாகனங்கள் நகரின் முக்கிய பகுதிகளில் தயாராக இருக்கும். ஜூலை தொடங்கிய சண்டிகர் காவல் துறையின் இச்சேவையை 2017 டிசம்பர் வரையில் 11 பெண்கள் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.
பணி விட்டு தனிமையில் வீடு செல்வது மற்றும் வாகனங்கள் பழுது ஏற்பட்டு தனிமையில் இருப்பது போன்ற ஆபத்தான நேரங்களில் வீட்டிற்கு செல்ல இந்த சேவையை பயன்படுத்தலாம். ஆனால், ஒரு சில பெண்கள் இந்த சேவையை வாடகை கார் போன்று பயன்படுத்தியது வருத்தமளிப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
சண்டிகர் காவல்துறையின் “ We care for you “ சேவை பெண்கள் பாதுகாப்புக்கு உரித்தான ஒன்றாக இருந்தாலும் அதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன. காவல்துறையின் பணி குற்றங்களை குறைத்து பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதே தவிர இது (PCR service) அல்ல எனத் தெரிவித்தனர்.
“ எனினும், சண்டிகர் காவல்துறையின் “ We care for you “ சேவை குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியும், நடிகையுமான கிர்ரோன் கேர் 2017 நவம்பர் தன் ட்விட்டரிலும், செய்திகளிலும் பேசி வருகிறார் “
இரு மாநிலங்களின் முக்கிய தலைநகரில் “ We care for you “ சேவை அதிகளவில் பயன்படாமல் சென்றாலும் ஏதோ ஒரு இடத்தில் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என பார்க்க வேண்டும்.
I’m here for you: Kirron Kher tells Chandigarh women
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.