This article is from Oct 11, 2019

மேற்கு வங்கத்தில் கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் கொடூரமாக கொலை .

மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண், அவரின் கணவர், 6-வது மகன் என வீட்டில் இருந்த அனைவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

பந்த் பிரகாஷ் பால்(35) தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் மனைவி பியூட்டி மோண்டல் பால் (30) மற்றும் அவர்களின் 6 வயது மகன் ஆகியோர் வசித்து வந்த வீட்டில் அக்டோபர் 8-ம் தேதி விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவிக்க நண்பர்கள் வந்த பொழுது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதன் பின்னர் வீட்டில் இருந்தவர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மூவரின் உடலிலும் வெட்டுக் காயங்கள், இரத்தம் வெள்ளமாய் காட்சி அளித்து இருந்ததாகவும், ஆனால் குழந்தையின் கழுத்தை துணியை சுற்றி நெரித்து இருந்ததாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது .

பந்த் பிரகாஷ் கொலை சம்பவம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி ஆதரவாளர்களால் அரசியல் சார்ந்த விவகாரமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது . ஏனெனில், கொலை செய்யப்பட்ட பந்த் பிரகாஷ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர் எனக் கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் அமைப்பில் இணைந்ததாக கூறுகின்றனர். மேலும், ஊடகத்தில் இச்செய்தியை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து இருந்தன.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா என்பவர் தன் ட்விட்டர் கணக்கில், பந்த் பிரகாஷ் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு வீட்டில் இரத்த வெள்ளத்தில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோவை பதிவிட்டு மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், இந்த சம்பவம் தன் மனதை உலுக்கி உள்ளதாகவும் பதிவிட்டு இருந்தார்.

Twitter post archived link 

போலீஸ் விசாரணை : 

கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், சம்பவம் தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனை எதிர்த்து ஆசியர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் மற்றும் அப்பகுதியில் பேரணியை நடத்தினர்.

மேற்கு வங்க ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் பிஜேபி ஆதரவாளர்கள் என பலரும் பந்த் பிரகாஷ் குடும்பத்தினர் கொலை சம்பவம் அரசியல் நோக்கம் கொண்டதாக தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், ஆளும் மம்தா அரசிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

ஆனால், கொலைக்கு காரணம் அரசியல் நோக்கம் இருப்பதாக கூறும் கருத்துக்களை போலீசார் தரப்பில் மறுத்து வருகின்றனர். கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கொலையில் அரசியல் செயல்பாடுகள் ஏதுமில்லை என்றே மேற்கு வங்க போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

6 வயது சிறுவன் , ஒரு கர்ப்பிணி பெண் என ஒரு குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொலை குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

Links :

https://web.archive.org/save/https://twitter.com/sambitswaraj/status/1182160535686660098?s=08

Gruesome murders shock West Bengal; RSS worker, pregnant wife, 8-year-old son hacked to death in Murshidabad

48 Hours after RSS Worker, Family ‘Brutally Murdered’ in Bengal’s Murshidabad, No Arrest Made Yet

Day after RSS worker, family’s murder in Bengal’s Murshidabad, police detain 2

Please complete the required fields.




Back to top button
loader