போலிச் செய்திகளை கண்டறிய வாட்ஸ் அப் புதிய அப்டேட் !

வாட்ஸ் அப் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிய பிறகு போலிச் செய்திகளின் பரவலும் வெகுவாக அதிகரிக்க தொடங்கியது. வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களுக்கு ஃபார்வர்டு செய்யப்படும் போலித் தகவல்கள், வதந்திகளை உண்மை என நினைத்து அனைவருக்கும் ஃபார்வர்டு செய்வதால் போலிச் செய்திகள் அதிவேகமாக மக்களிடையே பரவியது. இப்படி வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளால் பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன.
வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுக்கும் நடவடிக்கைக்குஅந்நிறுவனம் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஒரு நபர் ஒரு தகவலை 5 முறை மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும். அப்படி பகிரப்படும் தகவலில் ஃபார்வர்டு எனக் குறிப்பிடுவது போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. எனினும், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் போலிச் செய்திகள், வதந்திகள் மக்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது.
போலிச் செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் மற்றொரு புதிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட் மூலம், உங்களுக்கு வரும் ஃபார்வர்டு தகவலை பிரௌசர் மூலம் தேடல் (Search) செய்யும் வகையில் கொண்டு வந்துள்ளனர்.
🔍 WhatsApp is testing a Search by date feature!
The feature is under development and it will be available in future.https://t.co/jdgGHOPGQF
— WABetaInfo (@WABetaInfo) June 11, 2020
WABetaInfo ட்விட்டர் பக்கத்தில், ” சேர்ச் செய்யும் வசதியை வாட்ஸ் அப் சோதித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வசதி கிடைக்கும் ” என ஜூன் 11-ம் தேதி பதிவிட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி, வாட்ஸ் அப்பில் ஃபார்வர்டு செய்யப்படும் புகைப்படம் சார்ந்த தகவல் உண்மையா, பொய்யா என அறிந்து கொள்ள ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பகிரப்படும் தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, கொரோனா வைரஸ் குறித்து ஃபார்வர்டு செய்யப்படும் தகவலை சேர்ச் செய்தால் அதிகாரப்பூர்வ தகவலோ, செய்தியோ அல்லது அதுகுறித்து வெளியான உண்மைக்கண்டறிதல் தளங்களின் கட்டுரைகளை காணலாம்.
தற்போது சேர்ச் செய்யும் வசதி பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின்,யுகே மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வெப் உள்ளிட்டவையின் லேட்டஸ்ட் வேர்சனில் முதல் கட்டமாக தொடங்கி உள்ளதாக வெளியாகி இருக்கிறது.
Links :
WhatsApp Testing New Feature That Lets You Search for Messages by Date