உங்களின் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யுங்கள்-வாட்ஸ் அப் நிறுவனம்

ஸ்மார்ட் போன்களில் வைரஸ் தாக்குதல், ஹேக்கர்கள் தகவல்களை திருடுவது உள்ளிட்டவை சாத்தியமானது என்பது அனைவரும் அறிந்து இருப்போம். இன்றைய ஸ்மார்ட்போன் பயனர்கள் பெரும்பாலும் வைரஸ் தாக்குதல் அல்லது ஹேக்கர்கள் தகவல்களை திருடுவது குறித்து பெரிதும் கவலைக் கொள்வதில்லை. ஆனால், அப்படி கண்டு கொள்ளாமல் இருப்பது தனிப்பட்ட நபருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

அண்மையில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஃவாட்ஸ் அஃப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ” வாட்ஸ் அஃப் பயனர்கள் உடனடியாக வாட்ஸ் அஃப் செயலியை அப்டேட் செய்யுமாறு அறிவித்தது. மேலும், தங்கள் செல்போனின் ஓஎஸ்(OS)-யையும் அப்டேட் செய்யுமாறும் ” தெரிவித்து இருந்தது.

மே தொடக்கத்தில் லண்டனில் ஹேக்கர்கள் மூலம் நடத்தப்பட்ட ஸ்பைவர் தாக்குதலின் காரணமாக வாட்ஸ் அஃப் செயலியை அப்டேட் செய்யுமாறு கூறி உள்ளனர். பிகாசுஸ் எனும் ஸ்பைவர், இஸ்ரேலின் ரகசிய என்எஸ்ஓ குரூப் மூலம் டெவலப் செய்யப்பட்டது.

இந்த பிகாசுஸ் ஸ்பைவர் சாதாரணமாக செல்போன் அழைப்புகளின் வழியாக தானாகவே அவர்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. இன்ஸ்டால் ஆகிய பிறகு தானாகவே ஒருவருடைய செல்போன் கேமரா மற்றும் போன் கால்ஸ் உள்ளிட்டவையின் மூலமாக தகவல்களை ஹேக்கர்களுக்கு அனுப்பி வைக்கிறது.

தற்போதைய மே மாத தொடக்கத்தில் லண்டனை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் ஒருவரின் செல்போனை தாக்கிய போதே முதன் முதலில் கண்டுபிக்கப்பட்டது. இதன் பிறகே வாட்ஸ் அஃப் பாதிப்பு ஏற்பட்டதைக் கண்டுபிடித்து உள்ளனர். எனினும், ஸ்பைவர் தாக்குதல் வாட்ஸ் அஃப் மூலம் பிளாக் செய்யப்பட்டுள்ளது என்றும், பயனர்கள் தங்களின் வாட்ஸ் அஃப் செயலியை அப்டேட் செய்யுமாறும் அந்நிறுவனம் பாதுகாப்பு அறிவுரையை வழங்கி உள்ளது.

பிகாசுஸ் ஸ்பைவர் பற்றி லண்டனில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெரும்பாலான மக்களுக்கு அவற்றின் விளைவை பற்றி தெரியவில்லை. கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்டவையில் செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல், கிடைக்கும் லிங்க் வழியாக செயலிகளை பதிவிறக்கம் செய்வது சில சமயங்களில் வைரஸ் தாக்குதல் , ஹேக்கர்களின் தாக்குதலுக்கு வழி வகுக்கும்.

வளர்ந்து வரும் இன்றைய நவீன காலத்தில் உங்களின் தனிப்பட்ட தரவுகளை வைத்து உங்களுக்கு எதிரான காரியங்களை செய்து விட முடியும் என்பதை நினைவில் வைத்து ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பொழுது பாதுகாப்பாக இருக்க முயற்சியுங்கள்.

Proof : 

WhatsApp discovers ‘targeted’ surveillance attack

Update WhatsApp now to avoid spyware installation from a single missed call

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
Donation pls, என்றவுடன் ஆகா காசு கேட்கிறார்களே என்றெல்லாம் நினைக்க வேண்டாம் . எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை நிதி உதவியாக செய்யலாம். உங்களின் (மக்களின்) பத்திரிகையாக இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா/ உதவியாக தரலாம்.

Donate with

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close