யார் இந்த ஏழு பேர்?

யார் இந்த ஏழு பேர்? அந்த ஏழு பேர் இவர்கள் தான் . ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 26 பேரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டது . அதன் பிறகு வழக்கு தொடரப்பட்டு அந்த 26 பேரில் ஏழு பேர் தவிர மீதம் உள்ள 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். அதில் சிலருக்கு தூக்கு சிலருக்கு ஆயுள் தண்டனை என்று இருந்தது அதிலும் நளினிக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி அவர்களே கூறிய சுவாரசியமான சம்பவங்களும் நடந்தது.
ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டாலும் இன்று நீண்ட காலம் சிறையில் இருப்பதாக காரணம் கூறியும் மேலும் பல ஆண்டுகளாக கருணை மனுக்கு பதில் சொல்லாமலே இருந்த காரணத்திற்காகவும் அந்த எழுவருக்குமே தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அப்படியான சூழலில் அவர்களை இன்றும் விடுதலை செய்யாமல் இருப்பது மனித உரிமைக்கு எதிரானது என்றும் இப்படி எந்த கைதிகளும் இருப்பது இல்லை எனவும் பேசி வருகின்றனர் .
இக்குரல்கள் ஒலிக்கும் தருணத்தில் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ராஜிவ் காந்தி அவர்கள் மரணம் என்றதும் அனைவரும் சொல்வது ராஜிவ் காந்தி பிரதமராக இருக்கும் போது ஒரு பிரதமரையே கொன்று விட்டனர் என்று கூறுவதுண்டு. கொல்லப்படும் போது அவர் பிரதமர் இல்லை முன்னாள் பிரதமராக இருக்கும் போது தான் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தலுக்காக நடந்த பொதுக்ககூட்டத்தில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டார். இந்த அடிப்படை பலரும் உணராமல் இருப்பது.
யார் அந்த எழுவர்? இதில் வெறும் பேட்டரி மட்டும் வாங்கி கொடுத்த 19 வயது இளைஞராக இருந்த பேரறிவாளனும் ஒருவர். பேரறிவாளனுக்காக அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவது அரசியல் கட்சி ஆட்களை சந்திப்பது என்றிருக்கிறார். தனது இளமையையே அங்கு தொலைத்து விட்டார் இனியாவது அவரை மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு பேட்டிகளிலும் பேசி கிட்டத்தட்ட அவர்களில் அனைவரில் நன்று தெரிந்த பெயர் பேரறிவாளன் தான்.
அடுத்தது நளினி, முருகன். இவர்கள் இருவரும் தம்பதியினர். இதில் நளினி பெயர் அடிக்கடி பத்திரிகைகளில் வரும் நளினி பிரியங்கா காந்தி சந்திப்பும் நடந்தது . அது பத்திரிகைகளில் பெரிய விவாவதமாகவும் ஆனது. இவர்களை தவிர சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஏ. ஆயுள் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் தான் அந்த ஏழு பேர்