“ நான் நாத்திகன் ஏன் ” – பகத்சிங் நூல் அறிமுகம்

நாத்திகம் என்றால் பெரியார் மட்டும் நினைவிற்கு வரும். ஆனால் ஒரு காம்ரேட் , அதுவும் இளைஞன். அவன் நாத்திகன் ஏன் ஆனேன் என எழுதினான் என்றால், அதை படிப்பது முக்கியம் அல்லவா ?

தோழர் பகத்சிங் அவர்களுக்கு  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.  சிறைச்சாலையில் வாழ்ந்த நாட்களில்  “நான் நாத்திகன் ஏன்” என்ற நூலை எழுதினார்.

நான் நாத்திகன் ஏன் என்ற நூலை தமிழில் ப.ஜீவானந்தம் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். எளிமையான மொழிப்பெயர்ப்பு. சுலபமாக வாசிக்கலாம்.

நாத்திக முன்னோடிகள் மற்றும் இந்தியாவில் நாத்திகம்.

அறிமுக வாசகர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.  இந்தியச் சமூகம் மட்டும் அல்ல மேலை நாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் மீதும் கடவுள்  நம்பிக்கை திணிக்கப்படுகிறது. இதை எதிர்த்து உலக அளவில் பல்வேறு நாத்திகப் புரட்சியாளர்கள் தோன்றினார்கள்.

குறிப்பாக, வெளி நாட்டில் தோன்றிய நாத்திகப் புரட்சியாளர்களின் பெயர்கள் இங்குக் குறிப்பிட வேண்டும். கி.பி 18 நூற்றாண்டின் பிற்பகுதியில் நீட்சே, ஜோன் போல் சார்த்தர் போன்ற தலைசிறந்த நாத்திகவாதிகள் வெளிநாடுகளில் தோன்றினார்கள். இதன் மூலம் இந்தியாவில் மேலைநாட்டு நாத்திகத் தத்துவங்கள் பரவத் தொடங்கியது.

1800களுக்குப் பிறகு இந்தியாவில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு சமூகத்தில் பரவத் தொடங்கியது. அதன் விளைவாகப் படித்த இளைஞர்கள் மத்தியில் நாத்திகக் கருத்துக்கள் ஊடுருவத் தொடங்கியது.

எதிர்ப்பு 

“நான் நாத்திகன் ஏன்” என்ற தலைப்பில்  கடவுள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார். கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டைத் தனது நண்பர்களிடம் தெரிவித்தார். அதற்கு சில மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்தார். பகத்சிங்  நாத்திக கருத்துக்கு அவரது அவநம்பிக்கையும் ஆணவமுமே காரணம் என அவரது நண்பர்கள் குறிப்பிட்டனர்..

பகத்சிங்கிற்கு நண்பராக  திகழ்ந்த  பூதகேஸ்வர தத்தும் மூலம் சில சமயங்களில் (எதேச்சதிகாரி)  அடாவடி காரன் என்று அழைக்கப்படுகிறேன் என பகத்சிங் கூறினார். எதிர்ப்பு அவரை அசைத்துவிடவில்லை .

தலித் குறித்து பகத்சிங்

இந்தியச் சமூகத்தில் தலித்  மக்கள்  மீது நடக்கும் கொடுமைகள்  குறித்து பகத்சிங்  தெளிவானப் பார்வையோடு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வறுமையும், மூடத்தனம் நிறைந்த சமார்  (வட நாட்டில் உள்ள பட்டியல் சாதி) குடும்பத்தில் பிறந்த  ஒருவரின் நிலையைக் குறித்து எழுதியுள்ளார். இந்நிலையிலுள்ள குடும்பத்தில் பிறந்தால் ஒருவனுக்குக் கல்வி எப்படிக் கிடைக்கும். அவன் பரம ஏழையாக  உள்ளான், பிறகு எப்படிப் படிப்பது சாத்தியமாகும் என ஆதங்கப்படடார்

மேலும், தாழ்த்தப்பட்ட மக்கள் மறந்தும் வேதத்தைக் கேட்டால் அவர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி  ஊற்ற வேண்டும் என வேதங்களில்  கூறப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார் பகத்சிங். இதைப்போன்ற அக்கால நடைமுறை, வேதம் அவரை நாத்திகம் பக்கம் திருப்பியுள்ளது.

பகத்சிங் இளமைப் பருவம்

பகத்சிங் சிறிய வயதிலிருந்து நாத்திகராக வளரவில்லை. பகத்சிங் இளமைப் பருவத்தில் தனது தாத்தாவின் ஆதரவில் வளர்த்துள்ளார். பகத்சிங் தாத்தா தீவிரமான கடவுள் நம்பிக்கை உடையவர். பகத்சிங் தாத்தா ஆரிய சமாஜ் அமைப்பில் இருந்தவர். இதனைக் கொண்டு  இளமைக் காலத்தில் முழு நாத்திகனாக பகத்சிங் வளரவில்லை என அறியமுடிகிறது.

பகத்சிங் தனது மேற்படிப்பிற்கு லாகூரில் உள்ள டி.எ.வி. பள்ளியில் படித்தார். அப்போதும் முழு  நாத்திகனாக மாறவில்லை. பின்னர் தந்தையுடன் வாழ்கிறார் பகத்சிங். அந்தக் காலகட்டத்தில் தான் தன்னைச் சுதந்திரத்திற்காகத் அர்ப்பணிக்க வேண்டும் எனச்  சிந்தித்தார்.

தோழர் பகத்சிங் தொடக்கக் காலக்கட்டங்களில் கல்லூரி சேர்ந்து படிக்கும் வரை மத அடையாளங்களைப் பின்பற்றி வந்தார். அவர் கல்லூரிக்குச் சென்ற பிற்பாடு தான் மதங்கள் பற்றிய புரிதல் உருவானது. அங்கு தான் மதங்கள் குறித்த உரையாடல்கள் வளர்ந்தது.

பச்சை நாத்திகனானேன்”   

பகத் , மேலை நாட்டு ஆய்வாளர்கள் நூல்களை வாசித்தார். வாசிப்பே அவரை மாற்றியுள்ளது அதன் மூலம் கார்ல் மார்க்ஸ், லெனின், பங்குனின் ஆகியோர்களின் முக்கியமான நூல்களின் அறிமுகம் கிடைத்தது.

குறிப்பாக, பங்குனின் எழுதிய கடவுளும் ராஜ்ஜியமும் “(god and state)” என்ற நூலை வாசித்த பிறகு தான் பகத் சிங் அவர்களுக்கு நாத்திகவாதியாக மாற உந்துசக்தியாக இருந்துள்ளது.  நிர்மலப் சாமியாரால்  எழுதப்பட்ட பகுத்தறிவு “(common sense)” நூலை வாசித்தார்.  பிறகு உலகத்தில் கடவுள் என்ற ஒன்று இல்லை எனத் தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

பூர்வ ஜென்மம் பற்றி பகத்சிங் கூறிய கருத்து

முன் ஜென்ம பலன் இல்லை என்றால் குழந்தை பிறக்கும் போது காது, கண் குறைகளோடு தான் பிறக்கின்றன என்று மூடநம்பிக்கை அவருக்கு எரிச்சலை தந்தது, பிறக்கும் முன்பே பாவி ஆகிடுமா குழந்தை ? என அறிவியல் காரணங்களைப் பேசினார் .

மனித வர்க்கத்தின் பலவீனமே தத்துவ வேதாந்தங்கள் என்று கடுமையாகச் சாடினார். அதற்குக் காரணம் மனிதன் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்குக் காரணம் தேட முயல்கிறான். இதற்கு நேரடியான காரணம் கிடைக்கவில்லை என்றால் வேதக் கருத்துக்களை நம்புகிறான். இந்த இடத்தில் தான் மனிதன் தோற்றுப் போகிறான் என பகத்சிங் கூறினார்.

“கடவுள் ஒரு செங்கிஸ்கான் – அவனை வீழ்த்துகள்”

ஒரு மனிதன் செய்யும் பாவம் மற்றும் குற்றங்களை ஏன் கடவுளால் தடுக்க முடியவில்லை. எல்லா சக்தியுடைய கடவுள் அப்படிச் செய்வது எளிது தானே என்ற வினாவுடன் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார். போர்க்களத்தில் உள்ள பிரபுகளை கொன்றாவது அவர்களின் மனதில் உள்ள யுத்த வெறியை ஏன் கடவுள் குறைக்கவில்லை. கடவுளால் ஏன் முதலாம் போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை தடுக்க முடியவில்லை.

பிரிட்டிஷ் மக்களிடம் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற நல் உணர்வை ஏன் கடவுளால் ஏற்படுத்த முடியவில்லை. இப்படிப் பல கேள்விகளை பகத்சிங் எழுப்பினார்.

கடவுள் என்ற கருத்தின்  மூலம் உழைக்கும் மக்களுக்கு எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. மாறாகப் பல துன்பங்களை மட்டுமே சந்திக்கிறார்கள். முதலாளிகளுக்குத் தான் கடவுள் பலன் அளிக்கிறார். உழைக்கும் தொழிலாளிக்குப் பலன் அளிப்பது இல்லை.

மதங்களைப்  பற்றி பகத்சிங் கருத்து

கீழ் நாட்டுத் தத்துவங்கள் ஆகிய இஸ்லாம் மதத்துடன் இந்து மதம்  இணைந்து நிற்கவில்லை. ஜைன, பௌத்த மதங்கள் பிராமண மதமாகிய இந்து மதத்துடன் முழுவதும் வேறுபட்டு நிற்கிறது. மேலும், இந்து மதத்தில் ஆரிய சமாஜம், சனாதன தர்மம் ஆகிய கருத்துக்கள் ஒரே இடத்தில் உள்ளன. ஆனால் கருத்து அளவில் ஒன்றுக்கு ஒன்று வேறுபாடு பெரிய அளவில்  காணப்படுகிறது. இப்படி கடவுளை கற்பிப்போர்களிடமே ஒற்றுமை இல்லையே என்பது பகத் பார்வை

மகாத்மா காந்தி ஜி பற்றி பகத்சிங்

மகாத்மா காந்தி குறித்து பகத்சிங் சில விசயங்களைக் குறிப்பிடுகிறார். மகாத்மா காந்தி ஜி பெரிய மதிக்கத் தக்க மனிதர் ஆகிவிட்டார் . அதனால் அவரை விமர்சனம் செய்யக் கூடாது என்ற கருத்தில் பகத்சிங் மாறுபடுகிறார்.

காந்திஜி பெரிய மனிதர்  என்பதால் அவர் கூறுகின்ற எல்லா கருத்தும் சரியென்று ஆகிவிட முடியாது. மேலும் காந்திஜி கருத்து, அதனாலே அது உண்மை என்று சொல்ல வேண்டும் என்கிற மனப்பான்மை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் உதவாது என்றார் தோழர் பகத்சிங்.

தூக்குமேடை குறித்து பகத்சிங் 

பகத்சிங் தனக்கு வரப்போகும் இறப்பை  நினைத்துக் கவலைப்படவில்லை. தான் இறக்கும்  நேரத்தில் கூட கஷ்டங்களை சமாளிப்பதற்கு இறைவனை நாடிச் செல்லமாட்டேன் என்கிறார். இதற்கு உதாரணமாகக் கஷ்ட, நஷ்டங்களை எதிர்த்து நின்ற நாத்திகர்களைப் படித்து உள்ளேன். அதனால் எனக்கு இறப்பை கண்டு பயம் இல்லை என்கிறார்.

மரணமும் பயம் தரவில்லை !

Please complete the required fields.




Back to top button
loader