மகளிர் தினத்தன்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோவை அரசு அலுவலங்களில் ஸ்டேஷ்னரி பொருட்களை விற்று வருகிறார். நேற்று விற்பனை செய்வதற்கு தேவையான ஸ்டேஷ்னரி பொருட்களை வாங்கி வருவதற்காக தனியார் பேருந்தில் சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது.
தனியார் பேருந்தில் சென்ற போது 6 ரூபாய் டிக்கெட்க்கு 10 ரூபாய் கொடுத்துள்ளார் அப்பெண். அப்பொழுது, ஒரு ரூபாய் தாருங்கள் 5 ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார். சில்லறை இல்லை எனக் கூறியதற்கு உங்களுக்கு எல்லாம் எக்ஸ்ட்ரா காசு கொடுக்க முடியுமா என கூறி விட்டு சீட்டின் பின்னே எழுதிக் கொடுத்து உள்ளார்.
” பஸ்ஸில் வருகிற எல்லாரும் சரியான சில்லறை எடுத்து வர முடியுமா என மாற்றுத்திறனாளி பெண் கூறியதற்கு, “பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு திமிர் ஆகாது ” எனக் கூறிய நடத்துனர் அப்பெண்ணை இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தைய ஸ்டாப்பிலேயே இறக்கி விட்டு சென்றுள்ளார் “.
இச்சம்பவம் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்தின் விவரம், டிக்கெட் உள்ளிட்டவை உடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார் மாற்றுத்திறனாளி பெண்.
அரசு அலுவலங்களில் ஸ்டேஷ்னரி பொருட்களை விற்பனை செய்து தான் தன் தங்கையை படிக்க வைத்து வருவதாக கூறியுள்ளார் அந்த மாற்றுத்திறனாளி பெண்.
” மகளிர் தினம் என பெண்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த அதே நாளில் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இக்கொடுமை நடந்துள்ளது ” .
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.