உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் | இந்தியாவின் நிலை ?

உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் குறித்த ஆய்வு பட்டியல் ஒவ்வொரு ஆண்டிலும் ஆய்வு அமைப்புகள் மூலம் வெளியிடப்படுவது வழக்கம். அவ்வாறு வெளியாகும் நகரங்களின் பட்டியலின் மூலம் உலக நாடுகளின் உள்ள நகரங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும்.
சமீபத்தில் Economist Intelligence Unit மூலம் வெளியான உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ முதலிடத்தில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக டோக்கியோ நகரம் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது.
பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் இரு நகரங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை 45-வது இடத்திலும், தலைநகரான டெல்லி 52-வது இடத்திலும் இடம்பெற்று இருக்கின்றனர்.
60 நகரங்கள் கொண்ட பட்டியல் ஆனது நகரங்களின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், தனிப்பட்ட மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் டோக்கியோ (ஜப்பான்), சிங்கப்பூர் (சிங்கப்பூர்), ஒசாகா (ஜப்பான்), ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து), சிட்னி (ஆஸ்திரேலியா) முதலிய நகரங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இறுதி இடங்களில் லாகோஸ்(நைஜீரியா), கராகஸ் (வெனிசுலா), யான்கோன் (மியான்மர்), கராச்சி(பாகிஸ்தான்), டாக்கா( பங்களாதேஷ்) உள்ளிட்ட நகரங்கள் இடம்பிடித்து உள்ளன.
இந்தியாவின் தலைநகரான புது டெல்லி 52-வது இடத்திலும், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி 57-வது இடத்திலும் இடம்பெற்று உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து இரு நகரங்கள் இடம்பிடித்து இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது என்பதை பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் எடுத்துரைக்கிறது.
உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் குறித்து செய்தி வெளியிட்ட நியூஸ்7 முகநூல் பக்கத்தில் 45-வது இடத்தில் இருக்கும் மும்பை நகரத்தை விட்டு விட்டு 52-வது இடத்தில் இருக்கும் டெல்லியை மட்டும் குறிப்பிட்டு நியூஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளனர்.
Links :
Tokyo crowned world’s safest city; Mumbai at 45th spot while Delhi trails at 52nd