This article is from Mar 15, 2018

You Turn கடந்து வந்த பாதை…!

யாருடா நீங்க ! புதுசா கெளம்பி இருக்கீங்க, என்ற கேள்வி உங்கள் எல்லோருக்கும் தோன்றி இருக்கும். இன்று Youturn  தொடங்கி முதல் ஆண்டு. இந்த நாளில் இதை தொடங்குவதற்கு முன் சில மாதங்களாகவே இதை பற்றி பேசி வந்தோம். இதன் நிறுவனர் இருவர், விக்னேஷ் காளிதாசன் அவர்கள் Data scientist ஆக அமெரிக்காவில் பணியாற்றுபவர். சமூகத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறங்கிய எண்ணம் மெல்ல வெடித்தது. இந்த Fake news எல்லாம் வருதே இதற்கெல்லாம் ஏதாவது செய்தால் என்ன என்ற கேள்வியை திரு.ஐயன் கார்த்திகேயனிடம் வைக்க, பத்திரிகையாளரும், சமூக செயல்பாட்டாளரான அவருக்கும் புரளி மீதான அயர்ச்சி இருந்தது.  இருவரும் சுறுசுறுப்பாக செயல் வடிவம் கொடுத்தது தான் முகநூல் பக்கமாக முதலில் உதித்தது youturn .

மீம்சை தேர்ந்தெடுத்தது ஏன் :

புரளிகள் பல வகைப்படும். அதில், ஒரு செய்தியின் தலைப்பை மட்டும் படிப்பது ஒரு வகை. தலைப்பில் முழு தகவலும் இருக்காது, அதை புரியாமல் தவறான தகவலை பரப்புவது. மேலும், பல புரளிகள் பரவுவதற்கு செய்திகளை தேடி படிக்காத, செய்திகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் படிக்கிற நண்பர்களும் காரணம். பெரும்பாலும், மீம்களில் வருவதை அப்படியே நம்பி ஷேர் செய்து விடுகிறார்கள், அதுவும் வேகமாக வைரலாகி விடுகிறது. இதை பரப்பும் அந்த நபர்களுக்கு சென்றடைய மீம் ஒன்றே சரியான வழி என முடிவு செய்து முதன் முதலில் தொடங்கினோம்.

அதற்கு நல்ல வரவேற்பும் உங்களால் கொடுக்கப்பட்டது. வெகு சிறிய பக்கமாக இருந்த போதே முதல் அங்கீகாரம் தந்தது harry potter vaaya பக்கம். தொடர்ந்து பல பக்கங்களும் நமக்கு ஆதரவு அளித்தனர். Kakakapo, Learn agriculture, My Krishnagiri, Nakkal Mannan, Ammavasai, Mooditu poriya memes, Arasiyal Nayandi , ATKV, Smile Settai, Epic Tamil Comments, நம்ம ஊரு அருப்புக்கோட்டை அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. சில நேரங்களில் நமது பக்கத்தை முடக்கி விடுவார்களோ என்ற தயக்கம் வரும் போதெல்லாம் இத்தனை பக்கங்கள் நம்முடன் இருக்கிறார்கள், மீண்டு வருவதும், மீண்டும் வருவதும் மிக எளிய காரியமே என்கிற நம்பிக்கையை தந்து உள்ளீர்கள். best infotainment award

 

தொடங்கிய சில மாதங்களிலேயே Suriyan FM Tirunelveli இல் நம்மை நேர்காணல் எடுத்தனர். விகடன் நேர்காணல், ஆனந்த விகடனில் நம்மை பற்றிய செய்தி என தொடங்கியது பெரிய அங்கீகாரமாக கருதப்படும் TEDX நம்மை பேச அழைத்தார்கள். அதில், நம் நிறுவனர் ஐயன் கார்த்திகேயன் தமிழில் பேசியது நல்ல வரவேற்பையும் பெற்றது. ஒரு சர்வதேச அளவிலான அமைப்பில் தமிழில் பேசியது மகிழ்ச்சி. தொடர்ந்து Your Story  மற்றும் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் 8k FM இல் நமது நேர்காணல். Smile Settai நடத்திய DESI AWARDS இல் Best Infotainment Award நமக்கு கிடைத்தது. இத்தனை அங்கீகாரமும் ஓராண்டு என்ற சிறிய காலத்தில் கிடைக்க காரணம் முழுக்க முழுக்க நம் பக்கத்தை தொடரும் நண்பர்கள் மட்டுமே. உங்களுடைய பேராதரவால் உங்கள் பாராட்டையும், துணையையும் நம்பி வளர்ந்து உள்ளோம். தொடர்ந்து அதே அன்பையும் ஆதரவையும் தர வேண்டுகிறோம்.

Website ஏன் :

 தொடர்ந்து நம்மிடம் Website எதற்கு மீம் மட்டும் போதும் என்கிற நண்பர்களுக்கு, ஃபேஸ்புக்கில் மீம் போட்டால் சில முறை ஷேர் செய்கிறீர்கள். அது அனைவரையும் சென்றடைவது இல்லை. புதிதாக நம் பக்கத்திற்கு வரும் நண்பர்கள் ஏற்கனவே நாம் புரளி என்று கூறியதை பற்றி கேட்பார்கள். ஏனென்றால் ஒரே புரளி மாதம் அல்லது வருட இடைவெளியில் மீண்டும் பரவும். அப்போது தேடிய உடன் கிடைப்பதற்காக ஒரு தளம் வேண்டும். 400க்கு அதிகமான செய்திகளுடன் நமது தளம் தற்போது உள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேடி பார்ப்பதற்கும், இது புரளி என்று ஒரு வார்த்தையில் சொல்வது மட்டும் போதாது என்பதாலும் தொடங்கப்பட்டதே www.youturn.in இணையதளம்.

ஒரு முழுமையான உண்மை தளமாக இருக்க வேண்டுமென்றே தொடங்கி உள்ளோம். Website தவிர ட்விட்டர், இன்ஸ்டாகிராம், Youtube-லும் நாம் உள்ளோம்.

அப்படி என்ன பெருசா கலட்டிடீங்க :

 ஏதோ மிகப்பெரிதாக சாதித்து விட்டோம் என்கிற நினைப்பு நிச்சயம் இல்லை. ஆனால், மாற்றத்தை துவங்கி இருக்கிறோம் என்கிற மன நிறைவும், மகிழ்ச்சியும் உண்டு. சில பக்கங்கள் நம்மோடு மோதி, பின் அவர்கள் Fake Memes போடுவதை நிறுத்தி நம்மோடு நட்பாகிய கதையும் உண்டு. சிலர் அவர்களின் strategy-ஐ மாற்றி நமக்கு Tough கொடுக்கும் கதையும் உண்டு.

சில VIP-களுக்கு முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் வேலை வாய்ப்பை Youturn என்கிற இணையப் பத்திரிகை வழங்கி வருகிறது. ஐய்யயோ உன் Website-ஐ பார்த்தால் உனக்கு காசுல வரும் என்று சொல்பவர்கள், இது பலரின் உழைப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நாம் Website-க்கு விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டுகிற வேலையை செய்யவில்லை. இங்கு பல பக்கங்கள் அரசியல் கட்சிகளிடம் பணம் பெற்றும், உதவி செய்வதாய் மோசடி செய்தும், போலியான விசயங்களை வைத்து விளம்பரம் செய்து சம்பாரிக்கவும், இவ்வளவு ஏன் உடல்நிலை குன்றிய அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை பற்றி செய்தியை போடக் கூட பணம் பெற்று கொண்டு மீம் மற்றும் செய்தியை போட்டு வருகிறார்கள். இதை எதையும் செய்யாமல் நேர்மையான முறையில் வருவாய் ஈட்டுவது எந்த தவறும் இல்லை. அதை நிச்சயம் செய்வோம்..! உண்மையை தெரியப்படுத்துகிறோம்.. உண்மைக்காக உழைக்கிறோம்.. நேர்மையான முறையில் சம்பாரித்தல் நியாயமே. 

Rubi Math என்கிற APP வெளியிட்டு இருக்கிறோம். ஒரு அரசாங்க ஆசிரியர் எளிய முறையில் குழந்தைகளுக்கு கணிதத்தை சொல்லி கொடுக்கும் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த எல்லா வீடியோக்களையும் ஒரே தளத்தில் கட்டணமின்றி பார்க்க Rubi Math என்ற APP ஒன்றை Youturn வெளியிட்டு இருக்கிறது.  

இதுவரை நாம் வெளியிட்ட மருத்துவத்திற்கு உதவி கேட்டு வந்த விசயங்களை verify செய்தே வெளியிட்டு இருக்கிறோம். அதற்கு எந்த கட்டணமும் வாங்கவில்லை. செய்கிற வேலையை பொறுப்பாக நியாயமாக செய்யும் இடத்தில் என்றும் Youturn இருக்கும். இதுவரை பாராட்டிய நண்பர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள், சில பக்கங்கள், நம்மை எதிர்த்து களமாடும் அனைவருக்கும் நன்றி.

என்றும் உங்கள் அன்பை எதிர்நோக்கி….

You Turn குழு.

Please complete the required fields.
Back to top button
loader