You Turn பக்கத்தின் முதலாமாண்டு கொண்டாட்டம்..

You Turn தனது முதல் வருடத்தை வருகிற மார்ச் 15 ஆம் தேதி அடைகிறது. அதை கொண்டாடும் விதமாக சில போட்டிகளை நடத்தலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.
முதல் போட்டி செல்பி வீடியோ கான்டெஸ்ட் :
செல்பி வீடியோ கான்டெஸ்டின் தலைப்பு “ You Turn ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் ”. இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். இதில், Youturn-ஆல் நீங்கள் அடைந்த பலன், சோசியல் மீடியாவில் ஏற்பட்டு இருக்கிற தாக்கம் அல்லது Youturn பற்றி உங்களுக்கு இருக்கிற கருத்து, அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தை மையமாக வைத்து நீங்கள் ஒரு வீடியோ பண்ணலாம். அந்த வீடியோ குறைந்தது 3 நிமிடத்தில் இருந்து அதிகபட்சமாக 5 நிமிடம் வரை இருக்கலாம். 3-5 நிமிடம் கொண்ட உங்கள் வீடியோவை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்களின் தனிப்பட்ட பக்கங்களில் பதிவிடுங்கள். அதில், #1yearofyouturn #youturn என்று எங்களை tag செய்யவும். போட்டியில் நீங்கள் கலந்து கொண்ட தகவலுடன் உங்கள் செல்போன் எண் மற்றும் இமெயில் ஐடியை எங்களின் இமெயில் முகவரி அல்லது youturn ஃபேஸ்புக் பக்கத்தின் இன்பாக்ஸில் அனுப்பவும்.
இரண்டாவது போட்டி மீம் கான்டெஸ்ட் :
Youturn பற்றி அல்லது Fake news பற்றி நகைச்சுவையாக மீம்களை கிரியேட் செய்யலாம். இந்த மீம் போட்டியில் ஒருவர் எத்தனை மீம்கள் வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் செய்த மீம்களை உங்களது பக்கங்களில் பதிவிட்டு #oneyearofyouturn #youturn #Youturnmeme என்று எங்களை tag செய்யவும். குறிப்பாக, இதில் ஆபாசமான வார்த்தைகளோ அல்லது மோசமான வார்த்தைகளோ பயன்படுத்தக் கூடாது. உங்களால் முடிந்த அளவு நகைச்சுவையாக மீம்களை செய்ய முயற்சியுங்கள்.
வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் !!!!!!