தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்த வேளையில் அரசியல் கொள்கை மற்றும் கட்சிகளை முன்னிறுத்தி வதந்திகளும், செய்தி நிறுவனங்களின் பெயரில் போலி நியூஸ் கார்டுகளும் பெருவாரியாக சமூக வலைதளங்களில் குவிந்தன.
அப்படியான 2021 தமிழக தேர்தல் காலத்தில் நாம் கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்திய புரளிகள், போலி செய்திகள் தொடர்பான புள்ளி விவரத்தை இங்கே காணலாம்.
கட்சிகளுக்கு எதிராக பரப்பப்பட்ட புரளிகள் :
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பரப்பப்பட்ட புரளிகள் தொடர்பாக நாம் வெளியிட்ட மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை 83. கட்சி வாரியாக பார்க்கையில் திமுக 24, அதிமுக 9, பாஜக 31, காங்கிரஸ் 2, கம்யூனிஸ்ட் 2, மநீம 4, விசிக 4, நாம் தமிழர் கட்சி 7 ஆகிய எண்ணிக்கை கொண்ட கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.

நியூஸ் கார்டு புரளிகள் :
2021 தமிழக தேர்தலில் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நியூஸ் கார்டு புரளிகள் இடம்பிடித்து உள்ளன. பல கட்சிகளுக்கு எதிராக முன்னணி செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளை எடிட் செய்து பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் நம்ப வைக்க முயன்றதை நாம் களையெடுத்து உள்ளோம்.
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பரப்பப்பட்ட நியூஸ் கார்டு புரளிகள் குறித்து நாம் வெளியிட்ட கட்டுரைகள் மட்டுமேமொத்தம் 44. போலி செய்திகள் தொடர்பாக வெளியிட்ட கட்டுரைகளில் பாதி அளவிற்கு நியூஸ் கார்டு புரளிகளே இருந்துள்ளன.
கட்சி வாரியாக பார்க்கையில், திமுக 14, அதிமுக 03, பாஜக 16, காங்கிரஸ் 1, கம்யூனிஸ்ட் 1, மநீம 3, விசிக 2, நாம் தமிழர் கட்சி 4 ஆகிய எண்ணிக்கை கொண்ட கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
.
ஃபோட்டோஷாப் புரளிகள் :
.
புரளி செய்திகளில் ஃபோட்டோஷாப், மார்ஃபிங் செய்வது எப்போதும் பிரதானமாக இருக்கிறது. தமிழக தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பரப்பப்பட்ட ஃபோட்டோஷாப் புரளிகள் குறித்து நாம் வெளியிட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 38.
கட்சி வாரியாக பார்க்கையில், திமுக 9 , அதிமுக 6, பாஜக 15, காங்கிரஸ் 1, கம்யூனிஸ்ட் 1, மநீம 1, விசிக 2, நாம் தமிழர் கட்சி 3 என்ற எண்ணிக்கை கொண்ட கட்டுரைகளை வெளியிட்டு உள்ளோம்.(
எக்ஸ்செல் சீட் )
.
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பரப்பப்பட்ட ஒரு சில போலி செய்திகள் குறித்தும் நாம் வெளியிட்டு இருக்கிறோம். சில கட்சிகளுக்கு எதிரான வெளியிட்ட போலிச் செய்திகள் மக்கள் மத்தியில் கவனம் பெறாமலும் மறைந்து விடுகின்றன.
.
.
இதற்கு முன்பாக, 2020-ம் ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவே ஆதரவாக மற்றும் எதிராக பரப்பப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொய் செய்திகளை பொய் என பாரபட்சமின்றி யூடர்ன் ஆதாரத்துடன் நிரூபித்து வெளியிட்ட கட்டுரைகள் குறித்த புள்ளி விவரக் கட்டுரை வெளியிட்டோம்.
.
அந்த ஓராண்டிற்கு இணையான புரளிகள், போலிச் செய்திகளை தமிழக தேர்தல் காலத்தில் பரப்பியதை நாம் கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். போலி செய்திகளுக்கு எதிரான இப்பணி இனியும் தொடரும் !

Advertisement
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.
Join Membership
Ask YouTurn