This article is from Mar 23, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலி அதிபர் கண்ணீர் விட்டு அழுதாரா ?

பரவிய செய்தி

கொரோனா வைரஸ் நெருக்கடியால் கண்ணீர் விடும் இத்தாலி நாட்டு பிரதமர்.

மதிப்பீடு

விளக்கம்

சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. சீனாவை ஒப்பிடும் அளவில் இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

மார்ச் 23-ம் தேதி நிலவரப்படி, இத்தாலியில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,138 , இறந்தவர்களின் எண்ணிக்கை 5,476-ஐ தொட்டுள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டின் அரசால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை, தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததாக அந்நாட்டின் அதிபர் கண்ணீர் விடும் காட்சி என கீழ்காணும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இத்தாலி நாட்டின் அதிபர் அல்லது பிரதமர் என வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது பிரேசில் நாட்டின் ஜனாதிபதி போல்சோனாரோ ஆவார். 2019 டிசம்பர் 17-ம் தேதி போடேர் 360 என்ற இணையதளத்தில் போல்சோனாரோ கண்ணீர் விடும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அதில், பிரேசில் நாட்டின் அதிபர் பிளானால்டோ அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2018 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜூயிஸ் டிஃபோராவில்(எம்ஜி) பகுதியில் அவர் சந்தித்த கத்தி தாக்குதலை நினைவுக்கூர்ந்த போது அழுதுள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.

இத்தாலி நாட்டின் பிரதமரின் பெயர் Giuseppe Conte, அந்நாட்டின் ஜனாதிபதியாக Sergio Matarella பதவியில் உள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகுவது போன்று, இத்தாலி நாட்டின் அதிபரே அல்லது பிரதமரோ தங்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

Twitter link | archived link 

மார்ச் 17-ம் தேதி இத்தாலியின் பிரதமர் Giusepee Conte தன் ட்விட்டர் பக்கத்தில், இத்தாலிய மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டு இருந்தார். கொரோனா வைரசால் அதிக உயிர்களை இழந்த இத்தாலியின் அரசு தரப்பில் கூறாத தகவல்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader