This article is from Nov 11, 2017

அரசின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இந்தியா முதல் இடமா ?

பரவிய செய்தி

அரசின் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது .

மதிப்பீடு

விளக்கம்

அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது இச்செய்தி , ஆம் ஒட்டு போடும் பொழுது மட்டும் தான் இத்தகைய நம்பிக்கை மக்கள் மனதில் இருக்கும் . இம்முறையாவது நமக்கு நல்லது நடக்காதா என்று எண்ணி புதிய ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் .

ஆனால் உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது தவறு . அப்படியானால் நம்நாட்டிற்கு எந்த இடம் கிடைத்துள்ளது என்று பார்த்தால் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது . அரசின் மீது அந்த அளவிற்கு எப்பொழுதும் நம்பிக்கை இருந்து கொண்டுதான் இருக்கின்றது . ஏன் என்று பார்த்தால் வறுமையில் உள்ள பெரும்பாலான மக்கள் அரசாங்கம் தான் தங்களை காப்பாற்றும் என்று நம்பியுள்ளனர் .

இந்தியாவை பொறுத்த வரை எவ்வித மக்களாக இருந்தாலும் சரி ஒன்று அரசாங்கத்தை நம்புவர்கள் இல்லை என்றால் கடவுளை நம்புவர்கள் . அப்படி என்ன நம்நாட்டில் மக்கள் அரசாங்கத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றால் முன்னாள் ஆட்சியாளர்களின் மீது இருத்த வெறுப்புதான் .

ஆனால் இணையதில் இந்தியா தான் முதல் இடம் என்று கூறி சிலர் தவறான செய்தியை கூறியுள்ளனர் . OECD  அறிக்கையின் படி இந்தியா மூன்றாம் இடத்தை தான் பிடித்துள்ளது. மேலும்  ஆதாரமாக கொடுக்கப்பட படத்தை பார்த்தாலே தெரிந்து விடும் . நல்லாட்சி அமைந்தால் தான் மக்களின் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader