அரசு பள்ளிகள் இனி தனியார் வசம்.

பரவிய செய்தி

சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரின் வசம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசிற்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

நாட்டில் சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை அரசு-தனியார் பங்களிப்பின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று நிதி ஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது .

விளக்கம்

ந்தியாவில் உள்ள அரசு பள்ளிகள் பல சரியாக செயல்படாத காரணத்தால் அப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று சமீபத்தில் வெளியிட்ட மூன்றாண்டுகளுக்கான செயல்திட்டத்தில் நிதி ஆயோக் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்துடன் ஒப்பிடும்போது மிக மோசமான நிலையில் உள்ளத்தால் இவ்வாறு முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளது. ஆனால் கல்வியாளர்கள் பலர் நிதி ஆயோக்கின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

 தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்பு அரசு பள்ளிகளில்  மாணவர்களின் சேர்க்கைகள் குறைந்த வண்ணமே உள்ளன. அரசு பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களாகவும், ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பர். அரசு பள்ளிகள் சரியாக செயல்படவில்லை என்று குறைகளை கூறாமல், அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பதை தானே அரசு ஆலோசனை செய்ய வேண்டும்.

ஆனால் இங்கு நடப்பதோ வேறு விதமாக உள்ளது. அரசு பள்ளியில் கல்வியின் தரத்தை மேம்படுத்தாமல் தனியாரிடம் ஒப்படைப்பது சரியான முடிவல்லவே. அரசு கல்விக்கான நிதியை குறைத்துக் கொண்டே வருகிறது. இதிலிருந்தே தெரிகிறது அரசுக்கு கல்விக்காக செலவு செய்ய தயாராக இல்லையென்று. மத்திய அரசு கல்விக்காக 6% அளவிற்கு நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால் மாநில அரசின் பங்களிப்பையும் சேர்த்து 3.7% அளவிற்கே நிதி ஒதுக்கி வருகின்றது. நாட்டில் அனைவரும் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் கல்விக்காக 3% கல்வி வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் அந்த தொகையைக் கூட அரசாங்கம் செலவு செய்யவதில்லை.

சில சமயங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியாக செயல்படுவதில்லை என்று அவர்களின் மீது பழியை போடுவது தவறாகும். ஆசிரியர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று அரசு தான் கண்காணிக்க வேண்டும். அரசு பள்ளிகளை தனியாரின் பங்களிப்புடன் நடத்தலாம் என்று கூறியிருப்பது, கல்வியை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கும் நிகழ்விற்கு ஆரம்பம் ஆகும்.

அரை நூற்றாண்டிற்கு முன்பே கல்வி துறையை மேம்படுத்த காமராஜர் அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டவர். தமிழ்நாட்டில் கல்வி தரம் இந்நிலைக்கு உயர அடித்தளமிட்டவரே காமராஜர் தான். அவர் மேற்கொண்ட முயற்சிகளில் பாதியளவை கூட இப்பொழுது உள்ள அரசாங்கம் முயன்று இருந்தால் அரசு பள்ளிகளின்  கல்வி தரம் அதிகளவில் முன்னேறியிருக்கும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Advertisement

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button