This article is from Nov 16, 2017

அரசு பள்ளி மாணவனுக்கு கூகுளில் வேலையா ?

பரவிய செய்தி

17 வயது அரசு பள்ளி மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் மாதம் 12 லட்சம் ஊதியத்தில் வேலை .

மதிப்பீடு

சுருக்கம்

தவறான தொலைபேசி அழைப்பால் இச்செய்தி இந்தியா முழுவதும் பரவியுள்ளது .

விளக்கம்

சண்டிகரில் அரசு பள்ளியில் பயின்ற மாணவன் ஹர்சித் ஷர்மா என்பவருக்கு மாதம் 12 லட்சம் ஊதியத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது என்ற செய்தி இந்தியா முழுவதும் பரவியது .

ஹர்சித் ஷர்மா என்ற மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் கிடைத்துள்ளதாக கூறி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது . அதை முதலில் நம்பவில்லை என்றாலும் , அதை பற்றி தனது தலைமை ஆசிரியருக்கு மாணவன் தெரிவித்துள்ளான் . அதன்பின் தலைமை ஆசிரியர் பத்திரிக்கைக்கு கூறியதால் இச்செய்தி ஊடகங்கள் மூலம் வேகமாக பரவியது என்றும் , இதனால் தனது மக்கனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மாணவனின் தாயார் பாரதி ஷர்மா கூறியுள்ளார் . மேலும் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட வேலை பற்றிய கடிதம் ஏதும் தாங்கள் அளிக்கவில்லை . தன் மகனுக்கு வந்தது தொலைபேசி அழைப்பு மட்டுமே தவிர கடிதம் ஏதும் வரவில்லை என்றும் கூறினார் .

ஹர்சித் ஷர்மா அரசு இரண்டாம்நிலைப்பள்ளியில் இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்துள்ளார் . அவருக்கு டிசைனர் வேலைகளில் ஆர்வம் அதிகம் . மேலும் தனக்கு வந்த  தவறான அழைப்பை தலைமை ஆசிரியருக்கு தெரிவித்ததால் அந்த பள்ளி செய்தி அறிக்கை ஒன்றை ஜூலை 29 அன்று வெளியிட்டது . அதில் மாணவன் ஹர்சித் ஷர்மா மாதம் 12 லட்சம் ஊதியத்தில் கூகுளில் டிசைனர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

மேலும் அவருக்கு நிறுவனத்தில் மாதம் 4 லட்சம் ஊதியத்துடன் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும் . பயிற்சிக்கு பின்னர் மாதம் 12 லட்சம் ஊதியம் பெறுவார் என்று அறிக்கையில் இருந்தது .

இது பற்றி விவரங்களை கூகுள் நிறுவனத்திடம் கேட்டபோது ஹர்சித் ஷர்மா என்பவருக்கு வேலை சார்ந்த பதிவுகள் இல்லை என்று கூறியுள்ளனர் . இதை தொடர்ந்து பள்ளியின் அறிக்கைப் பற்றி நடவடிக்கை எடுக்குமாறு சண்டிகர் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது . அந்த மாணவனை தொடர்பு கொண்ட போது அழைப்பை பற்றி மட்டுமே தான் கூறியதாகவும் , வேறு எதுவும் கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader