அரசு மருத்துவமனைகளின் சில பகுதிகள் தனியாருக்கு குத்தகை.

பரவிய செய்தி

அரசு மருத்துவமனைகளின் சில பகுதிகளை 30 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

மாவட்ட மருத்துவமனைகளின் சில பகுதிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

விளக்கம்

 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குறுப்பிட சேவைகளை மட்டும் தனியாருக்கு 3௦ ஆண்டுகள் குத்தகைக்கு விடலாம் என்று சுகாதார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.

Advertisement

  உலக வங்கியுடன் கலந்து ஆலோசித்தப்பிறகு 140 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தாக்கல் செய்தனர். அதில், இரண்டு அல்லது மூன்று மாவட்ட மருத்துவமனைகளின் சில பகுதிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த பொது மற்றும் தனியார்க் கூட்டு சேவையில் இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு போன்ற குறிப்பிட்ட சேவைகள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக நிதி ஆயோக் மூலம் தயாரிக்கப்பட்ட மாதிரி ஒப்பந்தம் ஒன்றை மாநில அரசுகளுக்கு நிதி ஆயோகின் பிரதான அதிகாரியான அமிதாப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

  இது பற்றி இந்திய மக்கள் சுகாதார இயக்கத்தின் அமைப்பாளர் டாக்டர் அமித் செங்குப்தா கூறுகையில், நிதி ஆயோக் ஒரு ஆலோசனைக் குழுவாக இருக்க வேண்டும். ஆனால் இங்கோ அவசர அவசரமாக பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு அளிக்கும் விதத்தில் செயல்படுகிறது. இந்த திட்டம் இலவசமாக கிடைக்கும் பொது சேவையை அகற்றுவதற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

 tamilnadu peoples

  இத்திட்டத்தின்படி மாவட்ட மருத்துவமனைகளில் 50 படுக்கைகளை தனியாருக்கு அளிக்க வேண்டும், மேலும் அரசு மருத்துவமனைகளின் சுற்றுப்பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் கட்ட அனுமதி அளிக்க வேண்டும், தேவையான நிதியையும் மாநில அரசாங்கமே அளிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது. மேலும் தனியாரானது அரசு மருத்துவமனைகளின் இரத்த வங்கிகள், ஆம்புலன்ஸ் மற்றும் பிணவறை போன்றவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும்.

 ஏழை மக்களுக்கு இலவசப் படுக்கைகள் வழங்குவது பற்றி எந்தவொரு தெளிவான அறிவிப்பும் அதில் இல்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ளவர்கள் மட்டுமே இலவச சேவையைப் பெற முடியும் என்றுக் கூறியிருப்பது, அரசு மருத்துவ சேவைகளை மட்டுமே நம்பியுள்ளவர்களை ஒதுக்கி வைக்கும் செயலாகும்.

  நிதி ஆயோக் திட்டத்தின்படி நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசு மருத்துவமனைகளும், மக்கள் நலப் பணிகளும் கடுமையாக பாதிக்கும்.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button