அலாஸ்கா வளைகுடாவில் ஒன்று சேராமல் இருக்கும் இரு கடல்கள்.?

பரவிய செய்தி

இரண்டு கடல்கள் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டும், ஒன்றுடன் ஒன்று சேராமல் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு அதிசய இடம் தான் அலாஸ்கா வளைகுடா.

மதிப்பீடு

சுருக்கம்

இரு கடல்கள் என்று கூறுவதே தவறானது ஆகும். கடலில் காணப்படும் இத்தகைய மாற்றத்திற்கு, அப்பகுதியில் உள்ள பனிப்பாறை ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் நீரில் உள்ள மண் படிவங்கள் மற்றும் அதனுள் இருக்கும் இரும்பு தாதுக்களின் தன்மையினால் வேறுபட்டு காணப்படுகின்றன.

விளக்கம்

அலாஸ்கா வளைகுடா பகுதியில் உள்ள இரண்டு கடல்கள் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டும், ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும், கடல் நீரின் அடர்த்தியில் உள்ள மாறுபட்டால் தான் இவ்வாறு காணப்படுவதாகக் கூறி பல ஆண்டுகளாக இப்புகைப்படங்கள் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Advertisement

இரு கடல்கள் போன்று தனித்தனியாக காட்சியளிப்பதாகக் கூறிய  இக்கதையின் தொடக்கம் முதன் முதலில் Ken Bruland என்பவர் எடுத்த புகைப்படத்தில் இருந்து வைரலாகத் தொடங்கியது. 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியா-சாண்டா க்ருஸ் பல்கலைக்கழகத்தின் பெருங்கடல் அறிவியல் பிரிவின் பேராசிரியர் Ken Bruland கப்பல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் போது இத்தகைய அருமையான நிகழ்வை படம் எடுத்துள்ளார்.

இதை போன்று 2010-ல் கென்ட் ஸ்மித் என்ற புகைப்பட கலைஞர் மற்றொரு புகைப்படத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளார். அதனுடனும் தவறான கதையையும் பரப்பியுள்ளனர்.

அலாஸ்கா கடல் பகுதியில் காணப்படும் விசித்திரமான நிலையைப் பற்றி பேராசிரியர் Ken Bruland கூறுகையில், பனிப்பாறை ஆறுகள் கோடைக் காலங்களில் உருகி மலைகளில் இருந்து கடல் பகுதியை அடைகின்றன. இதில், உறை பனில் இருக்கும் அனைத்தும் பொருள்களையும் உடன் அடித்து செல்கின்றன.

பனிப்பாறை ஆற்றின் ஊற்றானது அதிகளவிலான நீருடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன. இவ்வாறு பாயும் களிமண் மற்றும் வண்டல் மண் கலந்த நீருடன் இருக்கும் இரும்பு தாதுக்களும் மத்திய அலாஸ்கா வளைகுடாவில் பின்தங்கி இணையாத இரு கடல் போல காட்சிக்கு காரணமாகின்றன என்று கூறியுள்ளார்.

இரு வேறு நீர்கள் இணைய வாய்ப்பில்லையா என்பதற்கு, இறுதியில் அவை இணைந்து விடுகின்றன, அதற்கான குறிப்பிட காலத்தில் நிகழ்வதை பார்க்கலாம். மேலும், இரு பரப்பிற்கு இடையே உள்ள எல்லைக்கோடானது நிலையற்றது என்றும் Ken கூறியுள்ளார்.

Advertisement

அலாஸ்காவின் இத்தகைய விசித்திரமான கடல் பகுதியை அருகில் பார்க்கையில் பனிப்பாறை ஆற்றில் இருந்து வரும் நீருடன் மாசு உள்ளிட்ட அழுக்குகள் படிந்துள்ளதை தெளிவாக காண முடிகிறது.

2008 ஆம் ஆண்டு Andrew schroth மற்றும் john crusius  ஆகிய இருவர் இணைந்து நடத்திய ஆய்வில் அலாஸ்கா வளைகுடா உலகிலே அதிக இரும்பு தாதுக்கள் காணப்படும் பகுதி என்று குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையில் இப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞரை பாராட்டியே ஆக வேண்டும். அலாஸ்கா வளைகுடாவின் இப்பகுதி பார்ப்பதற்கு இரு கடல்கள் போன்றே அழகாக உள்ளன. புகைப்படம் உண்மையானதாக இருந்தாலும் கூறிய கருத்தில் மட்டுமே தவறு உள்ளது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close