ஆஸ்திரேலியாவில் தேசிய மொழியா தமிழ் மொழி அறிவிப்பா ?

பரவிய செய்தி

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளனர் .

மதிப்பீடு

சுருக்கம்

இப்பொழுதுதான் ஆஸ்திரேலியாவின் தேசிய பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது .

விளக்கம்

ஆஸ்திரேலிய நாட்டில்  தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் அதிகளவில் செய்திகள் பரவி வருகின்றன . தமிழை ஆட்சி மொழியாக அறிவித்துள்ளனர் என்று கூறுவது உண்மையல்லவே. தற்போது, ஆஸ்திரேலியாவின் தேசிய பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பார்லிமெண்ட்டில் கோரிக்கை மட்டுமே எழுந்துள்ளது . ஆஸ்திரேலியாவின் பார்லிமெண்ட் உறுப்பினரான ஹீயுஜ் மெக் டெர்மட் என்பவர் நியூசவுத் வேல்ஸ் பார்லிமெண்ட்டில் கோரிக்கையை கல்வி அமைச்சரிடம் எழுத்துபூர்வமாக முன் வைத்துள்ளார் .

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வெட்வோர்த்வில்லேவில் இருந்து உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் ஹீயுஜ் மெக் டெர்மட் . இவர் தேர்தெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள கிர்ராவின் பள்ளியில் வைத்து சனிக்கிழமைகளில் தமிழ் படிக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன . இந்த வகுப்புகளில் 650 க்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர் .

Advertisement

இந்தியா , ஸ்ரீலங்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வர்த்தகம் மற்றும் வணிகத் தொடர்பின் முன்னேற்றத்தில் தமிழ் மொழியானது முக்கிய பங்காற்றுகிறது என்று நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ளார் . தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேறிவரும் ஓர் மாநிலம் . தமிழ் மொழியால் சர்வதேச முதலீடுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளுக்கு தமிழ் மொழி அவசியம் என்றும் கூறியுள்ளார் .

ஆஸ்திரேலியா மாணவர்கள் தமிழ் மொழியை கற்பதன் மூலம் , தமிழர்களின் கலாசாரத்தையும் , பண்பாட்டையும் அறிய இயலும் . மேலும் தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல , அது ஒரு செழுமைமிக்க கலாசாரம் என்று கூறினார் . தமிழின் அருமையை உணர்ந்து , தமிழை ஆஸ்திரேலியாவின் தேசிய பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் ஹீயுஜ் மெக் டெர்மட் . இதற்க்கு அங்குள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் நன்றியையும் , பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் .

மலேசியாவில் 1957 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ்வழிக் கல்வி பயிற்றுவித்து வருகின்றனர் . மலேசியாவில் மொத்தம் 524 தமிழ்வழிப் பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Advertisement
Please complete the required fields.




ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close