இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்டில் பரதநாட்டியத்தின் படம்.

பரவிய செய்தி
இந்திய நடனமான பரதநாட்டியத்தின் படம் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்டில் இடம்பெற்றுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
பரதநாட்டியத்தின் படம் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்டில் இடம்பெற்றிருப்பது இங்கிலாந்தில் பன்முக கலாச்சார விழாக்களைக் கொண்டாப்படுகிறது என்பதைக் குறிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
விளக்கம்
ஐக்கிய ராஜ்ஜியம்(யுனைட்டெட் கிங்டம்) என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டானது ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு புதிய வடிவில் வெளியிடப்படும். இந்நிலையில் 2015-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட் அலுவலகம் தனது சமீபத்தியப் பதிப்பை வெளியிட்டது.
இங்கிலாந்தின் புதிய பாஸ்போர்ட்டில் குறுப்பிட்ட சிறந்த நபர்களின் படங்களும், நாட்டின் முக்கிய நிகழ்வுகளும், இடங்களும், கலை மற்றும் கலாச்சாரத்தின் சின்னங்கள் போன்றவை இடம்பெறும். தற்பொழுது உள்ள புதிய பாஸ்போர்ட்டில், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தின் கட்டிடம், லண்டன் கண், டைட்டானிக் பெல்ஃபாஸ்ட் போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளன. மேலும் லண்டனில் உள்ள ஷேக்ஸ்பியரின் குளோப் தியேட்டர் கலைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமைத்திருக்கும்.
மேலும், பாஸ்போர்ட் பக்கத்தில் முக்கியமாக இடம்பெறும் இரண்டு பெண்களில் ஒருவர் எலிசபெத் ஸ்காட், மற்றொருவர் கணிதவியல் அறிஞர் அடா லவ்லேஸ் ஆவர்.
பாஸ்போர்ட்டின் ஓர் பக்கத்தில் கலைகளை கௌரவிக்கும் நோக்கத்தில், நாட்டில் கொண்டாப்படும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார விழாக்களின் படங்கள் இடபெற்றிருக்கும். இத்தைகைய கலாச்சாரம் மற்றும் கலைகளை வெளிப்படுத்தும் பக்கத்தில் இந்தியாவின் பரதநாட்டியத்தின் படமும் உள்ளது. அதில் பெண் ஒருவர் பரதம் ஆடுவது போன்று படம் அமைந்திருக்கும். பல நாடுகளில் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டில் இந்தியாவின் பாரதம் இடம்பெற்றிப்பது, அக்கலைக்கு கிடைத்த கௌரவம் ஆகும்.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டில் இந்தியாவின் பரதநாட்டியக் கலை இடம்பெற்றுள்ளது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியது. இச்செய்தியானது நம் நாட்டின் பரதக் கலைஞர்களை உற்சாகம் ஊட்டும் விதத்தில் அமைத்துள்ளது.
ஆதாரம்
culture india image