இது திப்பு சுல்தானின் புகைப்படமா ?

பரவிய செய்தி

பேரரசர் திப்பு சுல்தானின் உருவம் இதுவே , பாடப்புத்தகத்தில் பார்த்தது அனைத்தும் கற்பனையே …

மதிப்பீடு

சுருக்கம்

படத்தில் இருப்பவர் திப்பு சுல்தான் இல்லை, அவரின் பெயர் திப்பு திப். அவரை பற்றியும், திப்பு சுல்தானின் வீர வாள் பற்றியும் விரிவாக காண்போம்.

விளக்கம்

மைசூரின் புலி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் மைசூரின் பேரரசர் திப்பு சுல்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்தவர்.  வீரமிக்க திப்பு சுல்தான் பற்றிய கதைகளும், படங்களும் நாம் பள்ளி புத்தகத்தில் படித்து வந்திருப்போம்.

Advertisement

ஆனால், நாம் நினைப்பது போன்று பாடப்புத்தகத்தில் பார்த்த ஓவிய படங்களில் உள்ளது போன்று திப்பு சுல்தான் இருக்கமாட்டார். இப்படத்தில் உள்ளவர் தான் உண்மையான திப்பு சுல்தான் ஆவார் என்று சமூக வலைதளங்களில் இப்படங்கள் அதிகம் பரவின.

பேரரசர் திப்பு சுல்தான் 1799 ஆம் ஆண்டு மறைந்தார் . ஆனால் கேமரா கண்டுபிடிக்கப்பட்டதோ 1818 ம் ஆண்டில் தானே . திப்புவின் மறைவிற்கு பிறகு தான் கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

அப்படி என்றால் இவர் யார் என்று கேட்கலாம் , இவரின் பெயர் திப்பு திப் 1837 சன்சிபாரில் பிறந்தவர் . சன்சிபார் சுல்தானின் கீழ் பணியாற்றியவர் . இவர் யானை தந்தங்களின் விற்பனையாளர் , அடிமைகளின் வர்த்தகர் , ஆய்வகபணி மற்றும் ஆளுநராகவும் இருந்தவர் . இவர் அதிகமாக அடிமைகளை விற்பனை செய்து வந்தார் .

12 வருடம் இருந்த அரசரின் மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு எழு தோட்டங்களையும் , 10000அடிமைகளையும் வாங்கியவர் . இருவரின் பெயர்கள் மட்டுமே சிறிதளவு ஒத்துள்ளது .  இதை தவறாக புரிந்து கொண்டு வரலாற்று நிகழ்வுகளை ஒரு சிலர் மாற்ற எண்ணி தவறான செய்திகளை கூறுவர் .

திப்பு சுல்தானின் வீர வாள்:

Advertisement

 ” இந்துக்கள் கொல்லப்பட வேண்டும்” என்று எழுதப்பட்ட திப்பு சுல்தானின் வாள் என்று கூறி திப்பு திப்வின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியுள்ளது. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று கூறிய திப்பு சுல்தானின் உண்மையான முகத்தைப் பாருங்கள் என்றும் அதில் இடம்பெற்றுள்ளன.

ஆனால்,  திப்பு சுல்தானின் வாளில் இந்துக்கள் கொல்லப்பட வேண்டும் என்ற எத்தகைய வார்த்தைகளும் இடம்பெறவில்லை என்பதே உண்மை.

திப்பு சுல்தானின் வீர வாளில் உள்ள வார்த்தைகளின் ஆங்கில அர்த்தமானது, வரலாற்று ஆசிரியரான C. Hayavadana Rao எழுதிய Mysore Gazetteer  என்ற புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் இடம்பெற்றுள்ளது.

“ வெற்றியை அளிக்கும் என் வீர வாள் நிராகரிப்பவர்களை அழிக்கும் மின்னல் மற்றும் இஸ்லாத்தை தோற்றுவித்த முஹம்மத்தை மேன்மைப்படுத்திய வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. திப்பு சுல்தான் இறை நம்பிக்கை மற்றும் சர்வல்லமையுள்ள இறைவனை புகழ்ந்து கூறிய வாசகங்கள் அவரது வாளின் கைப்பிடியில் இடம்பெற்றுள்ளன ”

எனினும், நிராகரிப்பவர்கள், நம்பிக்கையற்றவர்களை அழிக்கும் தனது எண்ணத்தையும் அதில் வெளிப்படுத்தியுள்ளார். இது மற்றுமின்றி அவரது காலத்தில் வெளியான நாணயங்கள் மற்றும் பிற பொருட்களும் இதையே வெளிப்படுத்துகிறது.

திப்பு சுல்தான் ஒரு மதசார்பற்ற தலைவர் என்று கூறினாலும், மறுபுறம் சர்ச்சைக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை. 

1799 திப்பு சுல்தானை தோற்கடித்த பிரிட்டிஷ்காரர்கள், அவரது வீர வாளினை வெற்றியின் அடையாளமாக கருதி பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், 2003-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற General Baird Auctioned  என்ற ஏலத்தில் ரூ.1.5 கோடி கொடுத்து தனதாக்கினார் இந்தியாவை சேர்ந்த விஜய் மல்லையா.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button