இந்தியர்களின் தகவல்களை சீனாவிற்கு அனுப்பி UC BROWSER.

பரவிய செய்தி
இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களை சீனாவிற்கு அனுப்பும் uc ப்ரௌசெர்.
மதிப்பீடு
சுருக்கம்
ப்ரௌசெர்களில் உள்ள பாதுகாப்பு குறைப்பாடுகள் பற்றி 2015 ஆம் ஆண்டிலேயே புகார்கள் எழுந்தன.
விளக்கம்
சீனா நிறுவனத்திற்கு சொந்தமான uc ப்ரௌசெர், தனது பயன்பாட்டாளர்களின் விவரங்களை சீனாவில் உள்ள சர்வருக்கு அனுப்பியதாக எழுந்த புகாரை தொடர்ந்து மத்திய அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.
அலிபாபா என்ற சீன நிறுவனத்திற்கு சொந்தமான uc ப்ரௌசெர் இந்தியாவில் அதிகம் டவுன்லோட் செய்யப்படும் ப்ரௌசெர்களில் முன்னிலையில் உள்ளது. இந்திய ஆண்ட்ராய்டு செல்போன்களில் அதிகளவில் டவுன்லோட் செய்யப்படும் ஆப் களில் uc ப்ரௌசெர் 6வது இடத்தை பெற்றுள்ளது. இந்திய அளவில் மொத்தம் பத்து கோடி பேர்கள் uc ப்ரௌசெரை தினமும் பயன்படுத்துவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையில் uc ப்ரௌசெர், IMSI மற்றும் IMEI எண்கள் உள்ளிட்ட பயன்பாட்டாளர்களின் இருப்பிட தகவல்கள் போன்றவற்றை சீனாவில் உள்ள சர்வருக்கு அனுப்பியகதாக கூறப்படுகிறது. wifi பயன்படுத்தி இணையத்துடன் இணையும்போது, தொலைபேசியின் நெட்வொர்க் உள்ளிட்ட தகவல்கள் சர்வருக்கு அனுப்பப்படும். 2015 ஆம் ஆண்டில் ப்ரௌசெர்களில் உள்ள பாதுகாப்பு குறைப்பாடுகளை பற்றி டொரொண்டோ பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டது.
எனவே இந்தியாவில் விற்பனையாகும் அல்லது தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தங்களது சாதனங்கள் பற்றிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு விவரங்களை தெரிவிக்கும்படி அரசாங்கம் அறிவித்துள்ளது. டோக்லாம் எல்லை பிரச்சனையில் இந்திய-சீனா இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் இவ்வாறு புகார்கள் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் பல இடங்களில் சர்வர்களை நிறுவி தகவல்களை சேமித்து வைப்பது வழக்கமான ஒன்று. ஆகையால், மிகவும் மேம்ப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்துடன் பயன்பாட்டாளர்களின் விவரங்களை பரிமாறிக்கொள்கிறோம். எனினும் நாங்கள் எந்தவொரு தகவல்களையும், மற்ற நிறுவனங்களுக்கு அனுப்பவில்லை என்று uc ப்ரௌசெர் கூறுகிறது.
uc ப்ரௌசெர் எவ்வாறு பயன்பாட்டாளர்களின் விவரங்களை சீனாவிற்கு அனுப்பியது என்ற ஆய்வானது ஹைதரபாத்தில் உள்ள அரசு ஆய்வகத்தில் நடைபெறுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புகார்கள் நிரூபிக்கப்பட்டால் uc ப்ரௌசெரானது இந்தியாவில் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.