இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி.

பரவிய செய்தி
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியாவில் முதன் முறையாக நீர்வழி விமானம் 2010 ஆம் ஆண்டு அந்தமான் தீவுகளில் உள்ள பகுதிகளுக்கு இடையே இயக்கப்பட்டது. போக்குவரத்தை எளிதாக்கவும், கடல்வழி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிகையை அதிகரிக்கவும் இச்சேவையை அறிமுகம் செய்ததாக விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
குஜராத் சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளன்று பிரதமர் மோடி மெக்சன்னா மாவட்டத்தின் அம்பாஜி கோவிலுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தரை வழியாக செல்வதாக இருந்த பயணம் பாதுகாப்பு காரணங்களால் விமானம் மூலம் செல்ல மாற்றியமைக்கப்பட்டன. இந்நிலையில், மோடி சபரிமதி ஆற்றிலிருந்து நீர்வழி விமானம் மூலமாக தாரோய் அணைக்கு சென்றடைந்தார். எனவே இந்தியாவில் இயக்கப்பட்ட முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்த முதல் பயணி என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
இந்தியாவில் இயக்கப்பட்ட முதல் நீர்வழி விமானத்தில் மோடி பயணித்தார் என்று செய்திதாள்கள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தியாவில் இயக்கப்பட்ட முதல் நீர்வழி விமானம் இதுவல்லவே.
டெல்லியில் காணப்படும் பனிமூட்டம் காரணமாக புது டெல்லி மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கான விமானச் சேவை பாதிக்கபடுகிறது. எனவே இந்தியாவில் நீர்வழி விமானச் சேவையை அறிமுகம் செய்யும்மாறு யூனியன் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ப்ரபுல் பட்டேல் அறிவுரை செய்தார். அதை ஊக்குவிக்கவும், கடல் வழி சுற்றுப்பயணத்தை அதிகரிக்கவும் திரு.பட்டேல் 2010 டிசம்பர் மாதம் “ ஜல் ஹன்ஸ் ” என்ற முதல் நீர்வழி விமானத்தைத் தொடங்கினார். இந்த சேவையானது அந்தமான், நிக்கோபார் தீவுகளின் சுற்றுலாவிற்கு பெரிதும் பயன்படும் வகையில் இருக்கும் என்று பட்டேல் அவர்கள் கூறியிருந்தார்.
இத்தகைய நீர்நில விமானமானது அந்தமான் மற்றுன் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே இயக்கப்படும். மேலும், இச்சேவையின் மூலதனம் மற்றும் வரவு செலவு போன்றவற்றை பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் லிமிடெட் மற்றும் அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்தால் பகிர்ந்து கொள்ளப்படும். ” செஸ்னா 208A என்ற நீர்வழி விமானம், 8 பயணிகள் மற்றும் 2 விமானிகள் அமரும் வகையிலும், ஒரு மணி நேரத்திற்கு 250 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. 8 கோடி மதிப்புடைய இவ்விமானம் நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது “.
” எனினும், இந்த விமானச் சேவையானது போர்ட் ப்ளைர் மற்றும் ஹவேலோக் மற்றும் பின்னர் வடக்கு அந்தமானின் சில தீவுகளையும் இணைக்கும். நீர்வழி விமானம் போர்ட் ப்ளைர் விமான நிலையத்தில் தொடங்கி ஹவேலோக்கின் வாடேர்ட்ரோமே மற்றும் திக்லிபூர் வரை இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறையின் செயலாளர் ஜைடி தெரிவித்திருந்தார். மேலும், இது 100 சதவீதம் வெளிநாட்டு முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது “.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.