இந்தியாவில் எபோலா வைரஸா ?

பரவிய செய்தி
வட ஆப்பிரிக்காவை உலுக்கிய எபோலா வைரஸ் இப்பொழுது இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது . கர்நாடகாவை சேர்ந்த NIT மாணவன் ஒருவர் இந்த வைரஸால் இறந்து உள்ளார் . இதில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி நீரை பருகுங்கள் . மேலும் வெந்நீரையும் , உப்பையும் குடிப்பதற்கும் , குளிப்பதற்கும் பயன்படுத்துங்கள் . இந்த செய்தியை உடனடியாக அனைவருக்கும் பகிருங்கள் .
மதிப்பீடு
சுருக்கம்
எபோலா வைரஸ் இந்தியாவிற்குள் நுழையாமல் தடுத்துள்ளனர் , இந்த வைரஸால் யாரும் இறக்கவில்லை …
விளக்கம்
ஆப்ரிக்கா நாடுகளை அச்சுறுத்திய ஓர் வைரஸ் தான் எபோலா வைரஸ் . அந்நாடுகளில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டதால் தவிர்க்கப்பட்டது . ஆனால் இந்த வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது என்று செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது .
இந்த வைரஸால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவன் இறந்ததாகவும் , அதில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி நீரையும் , வெந்நீரையும் , உப்பையும் குடிப்பதற்கும் , குளிப்பதற்கும் பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர் .
ஆனால் இது போன்ற எந்த ஒரு வைரஸும் இந்தியாவிற்குள் நுழையவில்லை . 2004 இல் லிபேரியாவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 26 வயதுத்தக்க செமன் என்ற இளைஞர்க்கு எபோலா வைரஸின் அறிகுறி இருந்தது என்று கூறி அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர் . இரத்தப் பரிசோதனையில் அவருக்கு வைரஸ் இருப்பதாக கூறப்பட்டது .
எனினும், லிபேரியா அரசாங்கம் வழங்கிய மருத்துவ சோதனை சான்றிதழில் வைரஸின் அறிகுறி இல்லை என்று குறுப்பிட்டுள்ளனர் . இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் என்பதால் எளிதாக இந்த வகை வைரஸ் வேகமாக பரவி விடும் . மேலும் எபோலா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்தால் பேரழிவை எற்படுத்தும் . எனவே இதை கருத்தில் கொண்டு அந்த இளைஞரை அனுமதிக்கவில்லை .
மேலும் இந்த வைரஸால் இந்தியாவில் எவரும் இறக்கவில்லை . எபோலா வைரஸ் பரவ காரணம் ஒழுங்கற்ற உடல் உறவு போன்றவையே காரணம் என்று கூறியுள்ளனர் . இவைகளை போன்ற செய்திகளால் மக்களுக்கு அச்சம் ஏற்ப்பட வாய்ப்புள்ளதால் தவறான செய்திகளை பகிரவேண்டாம் .