This article is from Nov 16, 2017

இந்தியாவில் தான் 4ஜி இணைய வேகம் மிகக்குறைவு.

பரவிய செய்தி

உலகிலேயே இந்தியாவில் தான் 4ஜி இணைய வேகம் மிகக் குறைவாக உள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியா 4ஜி இணைய சேவையில் 15 இடத்தில இருந்தாலும் , 4ஜி இணைய வேகத்தில் மிகக்குறைவாக உள்ளது .

விளக்கம்

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஓப்பன் சிக்னல் என்ற நிறுவனம் உலகளவில் ஓர் ஆய்வை நடத்தியது . இந்த ஆய்வானது உலகத்தில் உள்ள நாடுகளில் உள்ள 4ஜி இணைய சேவை மற்றும் இணைய வேகம் பற்றியது . இந்த ஆய்வில் வெளியிடப்பட்ட தகவல்கள் சுவாரசியமானதாக உள்ளது .

இந்தியாவில் 2016 ஆண்டின் இடையில் 71.6 சதவீதமாக இருந்த 4ஜி இணைய சேவை 2017 ஆண்டில் தொடக்கத்தில் 81.6 சதவீதமாக அதிகரித்துள்ளது . மேலும் இணைய சேவை அதிகமாக கிடைக்கும் நாடுகளில் இந்தியா 15 வது இடத்தை பிடித்துள்ளது .

JIOவின் வருகைக்கு பின்னே இவ்வாறு இந்தியா 4ஜி இணைய சேவையில் முன்னேறியுள்ளது என்று தான் கூற வேண்டும் . இந்தியாவின் இணைய சேவையில் புதிய மாற்றத்தை கொண்டு வர 2016 ஆண்டு JIO களம் இறங்கியது . JIOவின் தொடக்கத்தில் இலவசமாக 4ஜி இணைய சேவையை வழங்கி வந்தனர் . இதனால் 4ஜி சேவை பற்றி அறியாத மற்றும்  பயன்படுத்தாதவர்கள் கூட அதிகமாக உபயோக்கிக்கத் தொடங்கினர் .

4ஜி இணைய சேவையில் முன்னேறி இருந்தாலும் , அதன் வேகம் என்று வரும் போது மிகக் குறைவாக உள்ளது என்று ஆய்வு கூறுகிறது . இந்தியாவின் சராசரி 4ஜி இணைய வேகம் 5.1 எம்பிபீஎஸ் ஆக உள்ளது .  உலகின் சராசரி 3ஜி இணைய வேகம் 4.4 எம்பிபீஎஸ்யை விட இந்தியாவில் சிறிதளவே அதிகமாக 4ஜி இணைய வேகம் உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர் .

4ஜி இணைய வேகத்தில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது . 4ஜி இணைய சேவை அதிகம் உள்ள நாடுகளில் தென்கொரியா முதல் இடத்தில உள்ளது . உலகின் சராசரி 4ஜி இணைய வேகம் 16.2 எம்பிபீஎஸ் ஆக உள்ளது .

இந்தியா 75 நாடுகள் கொண்ட பட்டியலில் பாகிஸ்தான் , ஸ்ரீலங்கா நாடுகளால் பின்னுக்கு தள்ளப்பட்டு 74வது இடத்தை பிடித்துள்ளதால் , இந்தியாவை உலகின் 4ஜி இணைய வேகம் குறைவாக கொண்ட நாடு என்று அறிவித்துள்ளனர் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader