இந்திய அரசு மருத்துவமனைகளின் அவலம்-மெர்சல் வசனம்

பரவிய செய்தி

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் மரணம், டயாலிசிஸ் சிகிச்சையின் போது மின்சாரம் தடைபட்டதால் 4 பேர் மரணம், பெருச்சாளி கடித்ததால் பிறந்த குழந்தை மரணம் என்று மெர்சல் படத்தில் வரும் வசனம்.

மதிப்பீடு

சுருக்கம்

மெர்சல் படத்தில், அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மரணங்கள் பற்றிப் பேசப்பட்ட வசனங்கள் உண்மையில் நிகழ்ந்தவை.

விளக்கம்

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் தொடக்கத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது. படம் வெளியாகிய பிறகு படத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்வதாகக் கூறி சில வசனங்கள் இருப்பதாக பா.ஜ.க-வை சேர்ந்த தமிழகத் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Advertisement

அப்படத்தில் இடம்பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த வசனங்களில் ஒன்று தான் அரசு மருத்துவமனைகளின் அவலம். ஒரு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்தன எனக் கூறும் வசனமானத்தில் உத்திரப்பிரதேசத்தில் குழந்தைகள் இறந்தச் சம்பவத்தை குறிப்பிட்டுள்ளனர்.

 korakpur

  உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. மருத்துவமனைக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்க்கு இரண்டு ஆண்டுகள் பணம் நிலுவை என்பதால் சிலிண்டர்கள் வழங்கப்படவில்லை. எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இத்தனை குழந்தைகள் இறந்தன. இதைத் தொடர்ந்து அக்குழந்தைகள் பிரிவின் மருத்துவர் மற்றும் சிலிண்டர் சப்ளையர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இச்சம்பவத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. என்சிபாலிட்டிஸ் என்ற ஒரு வகை மூளை வீக்க நோயினால் இவ்வருடம் மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துள்ளனர் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். காரணங்கள் ஆயிரம் இருப்பினும் இறந்த குழந்தைகள் ஒருபோதும் உயிர் பெற்று திரும்ப வரப்போவதில்லை.

அடுத்து, டயாலிசிஸ் சிகிச்சையின் போது நான்கு பேர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் புதுச்சேரியில் நிகழ்ந்தது. புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்ற போது திடீரென ஏற்பட்ட மின்தடையால் மூன்று பேர் உயிரிழந்தனர்.  சிகிச்சையின் போது ஏற்பட்ட மின்தடையாளும், ஜெனரேட்டர் போதிய அளவு மின்சாரம் சப்போர்ட் செய்யாததால் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

 gunder baby

    ஆந்திரா குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை சிகிச்சைக்காக ICU பிரிவில் வைத்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தை எலி கடித்து குதறியதால் குழந்தை இறந்துள்ளது.

Advertisement

நமக்கு தெரிந்தும் தெரியாமலும் அரசு மருத்துவமனைகளில் பல மரணங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில மெர்சல் பட வசனங்களில் இடம்பெற்றுள்ளன. அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்ந்தால் மட்டுமே இதுபோன்ற அவலங்கள் குறையும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button