இந்துக்கோவில் கும்பாபிஷேகத்தில் உணவருந்திய அரபு மன்னர்.

பரவிய செய்தி
அபுதாபியில் இந்துக் கோவில் கட்டுவதற்கு இடம் அளித்து அக்கோவிலின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த மன்னரின் மதச்சார்பின்மைக்கு தலைவணங்குகிறோம்.
மதிப்பீடு
சுருக்கம்
இந்துக் கோவில் கட்டுவதற்கு இடம் அளிப்பதாகக் கூறியது 2017-லில், ஆனால் அமீரகத்தில் இந்துக் கோவில் கும்பாபிஷேகம் என்றுக் கூறிய புகைப்படம் 2015-ல் இணையத்தில் பதிவிட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Imgur.com
விளக்கம்
அபுதாபியில் வசிக்கும் இந்துக்கள் கோவில் வழிபாட்டுக்கு அங்கிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துபாய் வரை சென்று வருகின்றனர். எனவே, இந்துக்களின் வழிபாட்டிற்காக அபுதாபியிலேயே கோவில் ஒன்று கட்ட அனுமதி அளிக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து இந்துக் கோவில் கட்டுவதற்கு அபுதாபி அரசு அனுமதி அளித்ததோடு, கோவில் கட்ட நிலமும் வழங்கியது. ஆகையால், அபுதாபியில் இந்துக் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஜனவரி 2017-ல் இந்திய குடியரசு விழாவில் பங்குக் கொள்வதற்காக இந்தியா வந்த அபுதாபி இளவரசர் மொகமது பின் சையது அல் நயீனுக்கு பிரதமர் மோடி நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
அபுதாபி அரசு அளித்த இடத்தில் கட்டப்பட்ட இந்துக் கோவிலின் கும்பாபிஷேகம் விழாவில் அபுதாபி மன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, உணவருந்தியதாகக் கூறி சமூக வலைதளத்தில் சில படங்கள் பரவி வருகின்றன.
ஆனால், அது போன்று நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. உணவருந்தியது போன்று பரவிய படங்கள் 2015-ல் ஆகஸ்ட் 31-ம் தேதி இணையத்தில் வெளியானவை. ” துபாயில் அமீரக உள்ளூர் வாசிகள் அப்பகுதியில் நடைபெற்ற ஓணம் பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உணவருந்திய போது எடுக்கப்பட்டது” .
இஸ்லாமிய நாட்டில் இந்துக் கோவில் அமைப்பதற்கு அனுமதி அளித்த அபுதாவி இளவரசரின் மதச்சார்பின்மைக்குதலைவணங்குகிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.