இனி கேரளாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை.

பரவிய செய்தி

கேரளா மாநிலத்தில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சைக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் வகையில் ஓர் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக முதலமைச்சர் பிரணாயி விஜயன் அறிவித்துள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

விபத்தில் காயமடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரின் உயிரைக் காக்க தனியார் மருத்துவமனைகள் 48 மணி நேரதிற்கு இலவசமாக சிகிச்சை அளித்திட வேண்டும் என்று கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரளாவில் நிகந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சைக்கு அனுமதிக்காததால் உயிரிழந்தார். இதை போன்று விபத்தில் காயமடைந்து உரிய சிகிச்சை அளிக்காததால் பலர் இறந்துள்ளனர். இச்சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் இறந்த தமிழக இளைஞனின் மரணத்திற்கு கேரளா முதல்வர் மன்னிப்பு கோரியதோடு, சில தனியார் மருத்துவமனைகளின் மீது தகுந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இந்நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காக்க கேரளா முதல்வர் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கேரள முதல்வர் கூறியதாவது, விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்தில் சிக்கியவர் ஏழையா அல்லது பணக்காரனா என்ற பாகுபாடின்றி 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களிடம் எத்தகைய தொகையையும் வாங்க கூடாது. அதற்கான பணத்தை அரசே செலுத்தும், பின்னர் அந்த பணமானது இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்.

மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ்கள் உதவிக்கு அனுப்பப்படும். எனினும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லும் போது அதற்கென பணம் பெறக் கூடாது.

 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் உடல்களை பணத்தைச் செலுத்தினால் தான் தருவோம் என்று கூறினாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிரணாயி விஜயன் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு கர்நாடகவில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இதே போல் டெல்லியிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கு விபத்து தொடர்பான “ Good Samaritan Policy ” என்ற திட்டத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button