இமயமலையில் பெண் வடிவில் பூக்கும் அரிதானப் பூக்களா ?

பரவிய செய்தி
இமயமலையில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கின்ற நாரிலதா மலரானது பெண்ணை போன்ற வடிவத்தில் உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
பழங்களின் விற்பனையை அதிகரிக்க பழங்கள் வளரும் பருவத்தில் பல வடிவங்களில் உள்ள அச்சுகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன.
விளக்கம்
நாரிலதா என்பதை ஹிந்தி மொழியில் பிரித்து பார்க்கும் பொழுது நாரி-பெண், லதா-சிறு கொடி தாவரம் என்று அர்த்தம் கிடைக்கிறது. இமயமலையில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கின்ற நாரிலதா மலரானதுபெண்ணின் வடிவத்தில் உள்ளது. நாரிலதா என்ற பெயரில் மலர்கள் இருப்பது உண்மை தான். ஆனால் இணையங்களில் நாரிலதா மலர் என்று காணப்படும் பெண்வடிவிலான படங்கள் அனைத்தும் தவறானவையே.
லதா என்றால் கொடி என்று அர்த்தம், ஆனால் இங்கு மரத்தில் மலர்வதாக காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் உள்ள சில மலர்களில் காம்பானது தலையில் இணைந்துள்ளது, சில மலர்களில் பின்புறத்தில் இணைந்துள்ளது. மேலும் அச்சடித்து போல் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இந்த படங்கள் போட்டோஷாப் எடிட்டிங் ஆகவோ அல்லது பொம்மைகளை ஒட்டி வைத்து எடுத்த படங்களாகவோ இருக்கலாம்.
சீனாவில் புத்தர் மற்றும் குழந்தைகள் வடிவில் பேரிக்காய்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர். பழங்கள் வளரிளம் பருவத்தில் அச்சுகளில் அடைத்து வைத்து விடுவர். இவை வளரும் போது அச்சுகளில் உள்ள எல்லைகளுக்குட்பட்டு தேவையான வடிவங்களில் வளர்ந்து விடுகின்றன. ஜப்பானில் தர்பூசணி பழங்கள் சதுர வடிவ பெட்டிகளில் அடைத்து வைத்து விடுகிறார்கள். இவை வளர்ந்த பின் சதுர வடிவங்களில் கிடைப்பதால் ஏற்றுமதி செய்ய எளிதாக இருக்கும் என்று இவ்வாறு செய்கின்றனர்.
புத்தர் மற்றும் குழந்தைகள் வடிவில் பேரிக்காய்கள் மற்றும் சதுர வடிவ தர்பூசணி போன்று பார்க்க வித்தியாசமாக இருந்தால் விற்பனை அதிகமாக இருக்கும் எண்ணி இவ்வாறு செய்து வருகிறார்கள். நாரிலதா மலர் என்று கூறி காண்பிக்கப்பட்ட பழங்களும் இது போன்ற அச்சுகளில் வளர்க்கப்பட்ட பழங்களா இருக்கலாம் அல்லது போட்டோஷாப் போன்றவையாக இருக்கலாம்.