This article is from Nov 11, 2017

இவர் பங்களாதேஷ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரா ?

பரவிய செய்தி

இளம்பெண்களின் கனவு நாயகன் , பங்களாதேஷ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இவர் தான் .

மதிப்பீடு

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் இல்லை பங்களாதேசின் பவர் ஸ்டார் .

விளக்கம்

இந்த செய்தியை கேட்ட உடன் பல இந்திய இளைஞர்களின் இதயம் படார் என்று வெடித்து இருக்கும் , பலர் சாபங்கள் கூட கொடுத்து இருப்பார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய செய்தி இது . திரைத்துறையை பொறுத்த வரை இது சாத்தியம் தானே . ஆனால் இது ஒரு தவறான செய்தியாகும் .

படத்தில் இருப்பவர் பங்களாதேசை சேர்ந்த அஷ்ரபுல் அலாம் சயீத் ஆவார் . இவர் இசை ஆல்பங்களில் நடிப்பவர் . ஆரம்பத்தில் திரைப்படங்களின் சீடிகளை விற்பனை தொழில் செய்து வந்தவர் . பிறகு செயற்கைக்கோள் தொலைக்காட்சி இணைப்புகள் போன்ற தொழிலை மேற்கொண்டார் .

தன் பொழுதுபோக்கிற்காக இசை ஆல்பங்களில் நடிக்க செய்தார் . இதனால் இவரை வைத்து கேளிக்கையாக சித்தரித்து சமூக வலைதளங்களில் செய்திகளையும் , படங்களையும் வெளியிட்டுள்ளனர் . 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் இவரின் youtube சேனல் 4.23 மில்லியன் பார்வையை பெற்றது .

இதன்பின் அதிகமாக கேளிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதால் திரைப்படங்கள் , தொலைக்காட்சி தொடர் , இசை ஆல்பங்கள் போன்றவற்றில் நடிப்பதை நிறுத்தி கொண்டார் .

தற்போது போக்ரா அருகில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார் . தமிழ்நாட்டில் சாம் அன்டேர்சன் , பவர் ஸ்டார் போன்று பங்களாதேசில் அலாம் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader