உண்மையில் துபாயில் விவேகானந்தர் தெருவா ?

பரவிய செய்தி
வடிவேலு படத்தில் பார்த்திபன் கூறியது போன்று உண்மையில் துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு இருக்கு. என்ன ஒரு ஆச்சரியம்..! செய்தியாகவும், மீமாகவும் பரப்புகிறார்கள்
மதிப்பீடு
விளக்கம்
வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் பார்த்திபனிடம் துபாயில் இருந்த விலாசம் பற்றி வடிவேலு விசாரிக்கும் காட்சி மிகவும் பிரபலமடைந்த நகைச்சுவை காட்சி.
வடிவேலுவின் அத்தகைய கேள்விக்கு, No.6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் என்று பார்த்திபன் பதில் அளித்திருப்பார்.
அப்படம் பார்த்த அனைவருக்குமே அது தவறான முகவரி என்று நன்றாகவே தெரியும். இருப்பினும், விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்று எழுதப்பட்ட பெயர் பலகையின் அருகே ஒருவர் நிற்கும் படமானது தற்போது ஒரு சில மீம் பக்கங்களால் பகிரப்பட்டு வருகிறது.
விவேகானந்தர் தெரு என்று எழுதப்பட்ட பலகையில் ஆங்கிலத்திற்கு மேலே அரபு மொழியிலும் எழுதப்பட்டிருக்கும். அதில், துபாய் மெயின் ரோடு வார்த்தையை அரபில் எழுதிருப்பர். அதில் ரோடுக்கு உரித்தான அரபி வார்த்தை “Jumeira ” பகுதியின் பெயராகும்.
ஆக, ஃபோட்டோ ஷாப் மூலம் பெயர் பலகையை மாற்றியதை கூட சரியான அர்த்ததில் எழுதவில்லை . இதை அறியாமல் சில மீம் பக்கங்களும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.