This article is from Jan 13, 2018

உயர் கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம்.

பரவிய செய்தி

இந்தியாவில் உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட, உயர் கல்வியில் சேரும் மாணவர்களை கணக்கிட்டு தயாரித்தப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

விளக்கம்

அகில இந்திய அளவில் 2016-2017 கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்கள், மாணவியர்கள் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 18-23 வயது உடையவர்கள் உயர் கல்வியில் சேர்வதைக் கணக்கிட்டு தயாரித்த பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஜனவரி 5-ம் தேதி பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

இந்தியாவில் உயர் கல்வியில் சேர்பவர்கள் பட்டியலில் தமிழகம் 46.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த மாணவர்களின் பட்டியல் மட்டுமின்றி ஆண்-பெண் விகிதாச்சாரம், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேரும் விகிதாச்சார அடிப்படையிலும் தமிழகமே முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை உயர் கல்வியில் சேரும் பெண்கள் 45.6  சதவீதமும், ஆண்கள் 48.2 சதவீதமும் உள்ளனர். இந்த சதவீதம் தமிழகத்தில் கல்வியின் மீது மாணவர்களுக்கு உள்ள ஈர்ப்பை வெளிபடுத்துகிறது.

இத்தகைய பட்டியலில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்கள் பின் தங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சராசரி விகித அளவு 35.7 சதவீதமாக இருக்கும் நிலையில், பீகார் 14.4%, அசாம் 17.2%, ஒடிசா 18.5%, மேற்குவங்கம் 21%, மற்றும் உத்திரப்பிரதேசம் 24.9% பெற்று பட்டியலில் இறுதியாக உள்ளன. வடக்கு மற்று கிழக்கு மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் நிலவும் வறுமை, வறட்சி, வேலைவாய்ப்பின்மை, திட்டமிடாமை போன்றவற்றால் குழந்தைகள் பள்ளி படிப்பையே முழுமையாக முடிக்கும் நிலையில் இல்லை.

யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை சண்டிகர் 56.1 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 2012-2013 கல்வியாண்டில் 30.2 சதவீதமாக இருந்த உயர் கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை 2016-2017 கல்வியாண்டில் 35.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இத்தகைய பட்டியலில் இருந்து, இன்றைய காலக்கட்டத்திலும் பல மாநிலங்களில் மாணவர்கள் உயர் கல்வியைக் காணாத நிலையில் உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader