உலகின் மிக நீளமான காரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பரவிய செய்தி

26 சக்கரங்களை கொண்டு உலகின் நீளமான கார் என்ற ஆச்சரியம் படைத்துள்ள இந்த காரில் நீச்சல் குளம் , ஹெலிகாப்ட்டர் தரையிறங்கும் வசதி , பெரிய நீர் படுக்கை போன்ற அணைத்து வசதிகளை உள்ளன .

மதிப்பீடு

சுருக்கம்

உலகில் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பல புதிய கண்டுப்பிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன .

விளக்கம்

  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஜே ஒபெர்க் என்ற நிறுவனம் உலகின் மிக நீளமான கார் ஒன்றை தயாரித்துள்ளது . 26 சக்கரங்களை கொண்ட இந்த காரின் நீளம் 33.5m அதாவது 100 அடி நீளமாகும் . ரெயில்களில் இருப்பது போல் இந்த காரின் முன்பக்கத்திலும் , பின் பக்கத்திலும் ஓட்டுனர் கேபினும் உள்ளது . பார்க்க நீளமாக இருப்பதால் குறுகிய தெருக்களில் எவ்வாறு திரும்ப இயலும் என்ற பிரச்சனை வராமல் இருக்க வளைவதற்கு ஏற்றவாறு காரின் நடுப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது .

அரண்மனைகளை மிஞ்சும் அளவிற்கு பல சொகுசான வசதிகள் உள்ளவாறு ஆடம்பரமாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது . காரின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால் , இதில் நீச்சல் குளம் , ராஜாக்கள் போல் உறங்க நீர்ப் படுக்கை , சிறியரக ஹெலிகாப்ட்டர் தரையிறங்க ஹெலிபேடு , செயற்கைக்கோள் தொடர்புசாதனங்கள் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது .

கண்காட்சிகளில் வைப்பதற்காக முதலில் இந்த கார் தயாரிக்கப்பட்டாலும் இதை வாங்குவதற்கு செல்வந்தர்கள் பலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் . சாலைகளில் ஓட்டுவதற்கு இன்னும் அனுமதி வாங்கவில்லை என்றாலும் ஹாலிவுட் படக்காட்சிகள் , திருமண ஊர்வலங்கள் போன்ற நிகழ்சிகளுக்கு காரை வாடைக்கு எடுக்க சிலர் முயற்சிக்கின்றன .

உலகின் மிகநீளமான கார் என்று கின்னஸ் சாதனை படைத்த இந்த காரின் ஒரு நாள் வாடகை லட்ச கணக்கில் இருக்கலாம் என்று கூறி வருகின்றனர் . இனி ஹாலிவுட் படங்களில் இந்த சொகுசு கார் சூப்பர்ஸ்டார் போன்று வலம்வரும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button